சபரிமலை தங்கம் மாயம்: தேவசம்போர்டு முன்னாள் தலைவர் வாசு கைது !
November 11, 2025 Published by anbuselvid8bbe9c60f

சபரிமலை ஐயப்பன் கோவிலில் துவாரபாலகர்கள் சிலையில் இருந்து 4 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் வாசு இன்று (நவம்பர் 11, 2025) மாலை சிறப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். இவர் இந்த வழக்கில் கைது செய்யப்படும் மூன்றாவது நபர் ஆவார். ஏற்கனவே கர்நாடக தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி மற்றும் முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள உயர் நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், தேவசம்போர்டு ஊழல் கண்காணிப்புப் பிரிவும் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதனால் சபரிமலை கோவில் நிர்வாகத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மாநில டிஜிபி கைதை உறுதி செய்துள்ளார்.










