ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ஒத்திவைப்பு: திடீர் உடல்நலக் குறைவால் ரத்தான கொண்டாட்டம்!
November 25, 2025 Published by anbuselvid8bbe9c60f

நவம்பர் 23-ம் தேதி சாங்லியில் நடக்கவிருந்த இந்திய மகளிர் கிரிக்கெட் நட்சத்திரம் ஸ்மிருதி மந்தனா – பாலாஷ் முச்சால் திருமணம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டது. காரணம்: ஸ்மிருதியின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
மணமகன் பாலாஷும் மன உளைச்சலால் சில மணி நேரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு ஏகேஜி, ஐவி டிரிப் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன; எல்லாம் நார்மல்தான். “அப்பாவின் நிலையைப் பார்த்து பாலாஷ் அழுது தீர்த்துவிட்டார்” என குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையடுத்து ஹல்தி, மெஹந்தி, சங்கீத் என அனைத்து ப்ரீ-வெட்டிங் புகைப்படங்களையும் ஸ்மிருதியும் பாலாஷும் இன்ஸ்டாகிராமில் இருந்து டிலீட் செய்துவிட்டனர். பழைய பிறந்தநாள் வாழ்த்துகளும் க்யூட் போட்டோக்களும் மட்டும் இன்னும் இருக்கின்றன.
வதந்திகள் பரவத் தொடங்கியதும் பாலாஷின் தங்கை, பிரபல பின்னணி பாடகி பலக் முச்சால் வேகமாக ஸ்டேட்மென்ட் வெளியிட்டார்: “ஸ்மிருதியின் அப்பாவின் உடல்நலன் காரணமாக திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த கஷ்டமான நேரத்தில் இரு குடும்பங்களின் தனியுரிமையை மதிக்க வேண்டுகிறோம்.”

பாலாஷின் அம்மா அமிதா முச்சால், “எங்கள் மகன் தானாக முன்வந்து ‘அப்பா குணமாகும் வரை திருமணம் வேண்டாம்’ என்று முடிவு செய்தான்” என்று கண்கலங்கச் சொன்னார்.
விரைவில் ஸ்ரீனிவாஸ் மந்தனா குணமடையட்டும், ஸ்மிருதி-பாலாஷ் ஜோடி மீண்டும் புன்னகைக்கட்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.










