சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173வது படமான ‘தலைவர் 173’ பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
முதலில் இப்படத்தை கமல் ஹாசன் தயாரிக்க, இயக்குநர் சுந்தர் சி இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென சுந்தர் சி தனது பிஸியான படப்பிடிப்பு அட்டவணை காரணமாக படத்திலிருந்து விலகியது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
இந்த நிலையில், தேசிய விருது வென்ற ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தான் ‘தலைவர் 173’-ஐ இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், படத்தின் நாயகியாக ‘அமரன்’ படத்துக்குப் பிறகு தமிழில் மிகப் பெரிய ப்ராஜெக்ட்டில் ஒப்பந்தமாகும் நடிகை சாய் பல்லவி நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல, மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் ‘சுழல்’, ‘விக்ரம்’ படங்களில் கவனகச்சிதமாக நடித்த நடிகர் கதிர் நடிக்கவுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இயக்குநர், நாயகி, கதிர் ஆகியோரின் பங்கு குறித்து இதுவரை புரொடக்ஷன்ஸ் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. விரைவில் படக்குழு சார்பில் பூஜை போட்டோக்கள் உட்பட முழு விவரங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினி ரசிகர்களுக்கு இந்தப் புதிய அப்டேட் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது!
தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.
இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை, பாரம்பரியம் மற்றும் சாதனைகளை…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா (84), கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில்…
தமிழ் சினிமாவை ஸ்டூடியோக்களின் நாலு சுவர்களுக்குள்ளிருந்து கிராமத்து மண்வாசனைக்கு அழைத்துச் சென்ற மாபெரும் கலைஞன், 'இயக்குனர் இமயம்' பாரதிராஜா (84)…