சமந்தா – ராஜ் நிதிமோரு இஷா யோகா மையத்தில் திருமணம்!

நடிகை சமந்தா மற்றும் ‘பேமிலி மேன்’ புகழ் இயக்குநர் ராஜ் நிதிமோரு ஆகியோர் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது!

கடந்த சில மாதங்களாக இணைந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு வந்த இருவரும் காதலில் இருப்பதாக தகவல்கள் பரவின. அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யாவிட்டாலும், தற்போது சத்குருவின் ஈஷா மையத்தில் மிக நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்ற மிக எளிமையான திருமணத்தில் மாலை மாற்றிக்கொண்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சமந்தாவுக்கும் ராஜ் நிதிமோருவுக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. சமந்தா முன்னதாக நாக சைதன்யாவை 2017-ல் திருமணம் செய்து 2021-ல் விவாகரத்து பெற்றார். அதேபோல் ராஜும் முன்னர் திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.

திருமணச் செய்தி இணையத்தில் பரவிய சில நிமிடங்களிலேயே #SamRajWedding, #SamanthaWedsRaj போன்ற ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகின. ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

இருவரும் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை, ஆனால் நெருங்கிய வட்டாரங்கள் “இருவரும் மிகுந்த மகிழ்ச்சியிலும் அமைதியிலும் இருக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளன.

புதுமணத் தம்பதிக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்!

anbuselvid8bbe9c60f

Share
Published by
anbuselvid8bbe9c60f

Recent Posts

“தலைவன் இருக்கின்றான்” – சிறப்பு பிரச்சாரப் பாடலை எழுதி, பாடி வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன்

திரு.கமல்ஹாசன் அவர்கள் 2026 தேர்தலுக்கான, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவாக “தலைவன் இருக்கின்றான்” என்ற தலைப்பில் ஒரு சிறப்பு பிரச்சாரப்…

17 மணத்தியாலங்கள் ago

இசை நிகழ்ச்சிக்காக ஒன்று கூடும் வேடன், அறிவு, அசல் கோலார்

தென்னிந்திய ஹிப்-ஹாப் இசை உலகத்தை ஒன்றிணைக்கும் “வணக்கம் வணக்கம் பெங்களூர்” விழா மிகப்பெரிய வெற்றியாக நிறைவடைந்தது.

3 நாட்கள் ago

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !!

முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் D.D.பாலச்சந்திரன் இயக்கத்தில் , சிவாஜி கணேசன் பேரன்…

5 நாட்கள் ago

கோபி நயினார் இயக்கத்ததில், “கலையரசி” ராதிகா நடிக்கும் “காலனி” பட ஃபர்ஸ்ட் லுக் !!

அதிதி மூவிஸ் தயாரிப்பில் டாக்டர் R.நாகராஜன் வழங்க, இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில், “கலையரசி” ராதிகா முன்னணி வேடத்தில் நடித்துள்ள…

6 நாட்கள் ago

திராவிட மாடல் அரசு – தொழில் துறை வளர்ச்சியால் படைத்த பொருளாதார சாதனை

திமுக எப்போது எல்லாம் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தொழில்துறை அசுர வளர்ச்சி கண்டு, பொருளாதாரத்தில் சாதனை படைக்கிறது. கடந்த…

1 வாரம் ago

திமுகவின் 8,000 ரூபாய் கூப்பன் அறிவிப்பின் முக்கியத்துவம் என்ன?

திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வழங்கிவரும் நலத்திட்டங்களை விரிவுபடுத்தியும் பல புதிய வாக்குறுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. வீட்டு உபயோகப் பொருட்கள்…

1 வாரம் ago