அஜித் நடித்த படத்தில் இடம்பெற்ற பாடலின் நாதஸ்வர இசைக்காக அந்த படத்தை ஐந்து முறை பார்த்தேன் என நடிகர் சிம்பு கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கமல்ஹாசனுடன் சிம்பு நடித்த ’தக்லைஃப்’ திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் புரமோஷனுக்காக அதில் நடித்த நட்சத்திரங்கள் பல ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், சிம்பு ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்த போது, “இப்போது எல்லாம் இணையம் இருப்பதால் எளிதாக ஒரு படத்தின் பாடல்களையும், அதில் உள்ள முக்கிய காட்சிகளையும் பார்க்க முடிகிறது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த மாதிரி இல்லை,” என தெரிவித்துள்ளார்.
“அஜித் நடித்த ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் இடம்பெற்ற ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற பாடலில் ஒரு சிறிய பிட்டாக நாதஸ்வர இசை வரும். அந்த நாதஸ்வர இசையை கேட்பதற்காகவே அந்த படத்தை நான் ஐந்து முறை பார்த்தேன்,” என்று கூறியுள்ளார். அந்த காட்சி குறித்த வீடியோவை ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், சிம்பு தற்போது மூன்று படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அவை: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் படம், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படம், ‘பார்க்கிங்’ படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் படம். இந்த படங்களின் படப்பிடிப்புகள் அடுத்தடுத்து நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தென் கொரியாவின் தனித்துவமான கதைக் கருவை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், தமிழ் ஒரிஜினல்ஸில் முதன்முறையாக ஒரு கொரிய வெப்டூன்…
Bigg Boss Tamil வீட்டில் படுக்கையறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த காலணிகள் தொடர்பாக ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு, TTF வாசன்…
Bigg Boss Tamil Season 10 நிகழ்ச்சியில், சிறப்பு நாமினேஷன் டாஸ்க்கைத் தொடர்ந்து லட்சுமி பிரியா Bigg Boss வீட்டிலிருந்து…
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், கடந்த வாரம் தனது கருத்துகள் தொடர்பாக எழுந்து வரும்…
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் நடைபெற்ற டாஸ்க் பரபரப்பான கட்டத்தை எட்டுகிறது. டாஸ்க்கின் போது லட்சுமி பிரியா,…
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…