சிம்பு – வெற்றிமாறன் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்.. சிம்புவின் கேரக்டர் என்ன?

நடிகர் சிம்புவும், இயக்குனர் வெற்றிமாறனும் இணையும் புதிய படம் பற்றிய செய்திகள் ஏற்கனவே  வந்த நிலையில், தற்போது அதன் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.

சிம்புவின் 49-வது திரைப்படமாக உருவாகும் இந்தப் படம், ‘வடசென்னை’ கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்டது என தெரிகிறது. சிம்பு ஒரு ரவுடி கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படும் இந்தப் படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். ஆச்சரியப்படும் விதமாக, பிரபல இயக்குனர் நெல்சனும் இதில் ஒரு சிறப்பு வேடத்தில் தோன்றவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இந்தப் படத்தின் கதை ‘ராஜன் வகையறா’ என்ற பெயரில் உருவாகி வருவதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்த மேலும் பல முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Natarajan Karuppiah

Recent Posts

நிஜ வாழ்விலும் ‘லெஜண்ட்’ தான்! வறுமையில் வாடிய பாவா லட்சுமணனுக்கு ஓடி வந்து உதவிய லெஜண்ட் சரவணன்!

தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…

1 வாரம் ago

ஓடிடியில் ‘தி லெஜண்ட்’ சரவணனின் அதிரடி வேட்டை: பிரைம் வீடியோவில் ‘லீடர்’ படம் புதிய சாதனை!

தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,

2 வாரங்கள் ago

நடிகர் வாகை சந்திரசேகருக்கு மத்திய அரசின் உயரிய “யுவ புரஸ்கார்” தேசிய விருது அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…

2 வாரங்கள் ago

ஒரு பக்கம் மனதை நெகிழ வைத்த இசை… மறுபக்கம் மாடர்ன் மியூசிக் மேஜிக் – சாம் CS அசத்தல்!

இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.

3 வாரங்கள் ago

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு சுபாஷ் என்ற பெயரில் பிரம்மாண்டமான திரைப்படத்தை ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்தயாரிக்கிறது

இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை, பாரம்பரியம் மற்றும் சாதனைகளை…

3 வாரங்கள் ago

என் தாய் தந்தைக்குக்கூட இவ்வளவு கடமைப்பட்டதில்லை! – மிஷ்கின்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா (84), கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில்…

3 வாரங்கள் ago