திரைப்பட செய்திகள்

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சிலம்பரசன் TR நடிக்கும் ‘அரசன்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் TR நடிப்பில் , இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பிரத்யேக புகைப்படத்தை பதிவிட்டு, சிலம்பரசன் TR சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் சிலம்பரசன்TR, விஜய் சேதுபதி , ஆண்ட்ரியா ஜெர்மியா ,சமுத்திரக்கனி, விக்ராந்த் ,கிஷோர், சைத்ரா ஜே. ஆச்சார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையில் கிரைம் வித் ஆக்சன் திரில்லராக தயாராகி வரும் இந்தத் திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வருகிறார்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. இதில் சிலம்பரசன் TR கலந்து கொண்டிருக்கிறார். இது தொடர்பான புகைப்படத்தை சிலம்பரசன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இதனிடையே மதுரையில் நடைபெற்ற ‘அரசன் ‘ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் சிலம்பரசன் TR- ‘மதுரை டைகர்’ என்ற கதாபாத்திரத்தில் கபடி விளையாட்டு வீரர்களுக்கான சீருடை அணிந்து நடித்திருக்கிறார் என்பதும், இப்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னை டி. நகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் வெற்றிமாறனின் வடசென்னை சினிமாடிக் யுனிவர்ஸாக குறிப்பிடத்தக்க வகையில் ‘ அரசன்’ உருவாகி வருகிறது என்பதும் இப்படத்தின் கதையை ‘பொல்லாதவன்’ படத்திற்கு முன்பே இயக்குநர் வெற்றிமாறன் எழுதி நிறைவு செய்திருப்பதால் தொடர்ந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று இந்த ஆண்டின் இறுதியிலேயே இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் வகையில் படப்பிடிப்பு பணிகள் திட்டமிடப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Natarajan Karuppiah

Recent Posts

காதல், குடும்ப உறவுகள் மற்றும் நகைச்சுவை கலந்த ‘லவ் ஆல்வேஸ்’ தொடரின் சுவாரசியமான டீசரை வெளியிட்டது ஜியோஹாட்ஸ்டார்

தென் கொரியாவின் தனித்துவமான கதைக் கருவை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், தமிழ் ஒரிஜினல்ஸில் முதன்முறையாக ஒரு கொரிய வெப்டூன்…

4 வாரங்கள் ago

பதற்றம் உச்சத்தை எட்டியது! TTF வாசன் மற்றும் ஜேசனின் வாக்குவாதத்தால் பரபரப்பான Bigg Boss Tamil வீடு

Bigg Boss Tamil வீட்டில் படுக்கையறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த காலணிகள் தொடர்பாக ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு, TTF வாசன்…

4 வாரங்கள் ago

கண்ணீர், கடினமான முடிவுகள் மற்றும் ஒரு விடைபெறல்: Bigg Boss Tamil வீட்டிலிருந்து லட்சுமி பிரியா வெளியேறினார்

Bigg Boss Tamil Season 10 நிகழ்ச்சியில், சிறப்பு நாமினேஷன் டாஸ்க்கைத் தொடர்ந்து லட்சுமி பிரியா Bigg Boss வீட்டிலிருந்து…

1 மாதம் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விஜய் சேதுபதி – “சூழல் புரியும் என நினைத்தேன்…”

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், கடந்த வாரம் தனது கருத்துகள் தொடர்பாக எழுந்து வரும்…

2 மாதங்கள் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: டாஸ்க்கில் வெடித்த பரபரப்பு – லட்சுமி பிரியா தள்ளியதில் காயமடைந்த ஆனந்தி!

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் நடைபெற்ற டாஸ்க் பரபரப்பான கட்டத்தை எட்டுகிறது. டாஸ்க்கின் போது லட்சுமி பிரியா,…

2 மாதங்கள் ago

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றம்

சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…

2 மாதங்கள் ago