திரைப்பட செய்திகள்

ZHEN STUDIOS பெருமையுடன் வழங்கும் நீ Forever பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

ZHEN STUDIOS தயாரிப்பில், இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து இயக்குநர் அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் வாழ்வை காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம்”நீ Forever”.

இப்படம் வரும் மார்ச் 27-ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. “தருணம்” என்ற வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் ஆகியோரின் இரண்டாவது தயாரிப்பாக இப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.

இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

எடிட்டர் எஸ்.ஏ.நாகார்ஜுன் பேசியதாவது…,

இந்த படத்துக்கு என்னை கூப்பிட்டதுக்கு இயக்குநருக்கு, டீமுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த மாதிரி நல்ல ஒரு படத்தில் பங்கெடுக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் சந்தோஷம். முதலில் என் அப்பாவுக்கும், அடுத்ததாக எங்கள் குருவுக்கும் நன்றி சொல்லிக்கிறேன். இந்த படத்தின் தயாரிப்பாளர் புகழ் சாருக்கும், என் நண்பர் மற்றும் இயக்குனர் அசோக் குமார் அவர்களுக்கும் என் பெரிய நன்றி. இந்த படத்தின் கதை உருவாக சுமார் 6 மாதங்கள் முழுக்க அசோக் உழைத்தார். நாங்கள் இந்த படத்தை ஒரு சூப்பரான கான்செப்ட்டாக உருவாக்கி, நல்ல முறையில் எடுத்திருக்கிறோம். இந்த டீம் எனக்கு ரொம்ப பெரிய ஆதரவாக இருந்தது. பல சவால்களை சமாளிக்கவும், படத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரவும் இந்த டீம் முழுமையாக உழைத்தது. படத்தை அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

இசையமைப்பாளர் அஸ்வின் ஹேமந்த் பேசியதாவது..,

முதலில் இந்த வாய்ப்பை கொடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் அசோக் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த படம் எங்களுக்கு சுமார் இரண்டு வருட பயணம். நாங்கள் ஒரு சிறிய குழுவாக பெரிய கனவுடன் இந்த படத்தை உருவாக்கியிருக்கோம். நான் நினைத்ததை எந்த கட்டுப்பாடும் இல்லாமல் செய்ய வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. எடிட்டர் மற்றும் டீம் முழுவதும் சேர்ந்து வேலை செய்ததால், இசை மற்றும் காட்சிகள் இன்னும் சிறப்பாக வந்திருக்கிறது. நடிகர்கள் சுதர்ஷன், அர்ச்சனா, சினேகா உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தொழில்நுட்ப குழுவும் மிகுந்த உழைப்புடன் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறது. மார்ச் 27 அன்று படம் வெளியாகிறது. இது ஒரு புதிய கான்செப்ட்டுடன், புதிய அனுபவத்தை தரும் படம். அனைவரும் திரையரங்கில் வந்து பார்த்து, உங்கள் உண்மையான கருத்துகளை பகிருங்கள். நன்றி.

நடிகை சினேகா சக்தி பேசியதாவது..,

இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் அசோக் மற்றும் தயாரிப்பாளர் புகழ் சார், ஈடன் மேம் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த படத்தில் நடித்தது எனக்கு மிகவும் சந்தோஷமான அனுபவம். இந்த படத்தின் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். நடிகர்கள் சுதர்ஷன், அர்ச்சனா, பிரதோஷ் மற்றும் முழு குழுவினருக்கும் என் நன்றி. குறிப்பாக அர்ச்சனா எனக்கு ஒரு சகோதரி மாதிரி ஆகிவிட்டார். என்னை ஆதரித்த என் பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த வாய்ப்புக்கு மீண்டும் ஒரு முறை நன்றி.

நடிகர் பிரதோஷ் பேசியதாவது..,

நான் பிரதோஷ். இந்த படத்தில் “ராக்கி” என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என்னை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் அசோக் மற்றும் தயாரிப்பாளர் புகழ் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த படம் எங்களுக்கு மிகவும் ஸ்பெஷல். படத்திற்காக இயக்குநர் மிகவும் உழைத்துள்ளார். அந்த உழைப்புக்காக இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நம்புகிறேன். நடிகர்கள் சுதர்ஷன், அர்ச்சனா, சினேகா மற்றும் முழு குழுவினரும் அருமையாக வேலை செய்திருக்கிறார்கள். இந்த படம் காதல், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் கலந்து இருக்கும் ஒரு நல்ல பொழுதுபோக்கு படம். எல்லா தலைமுறையினரும் ரசிக்கக்கூடியதாக இருக்கும். அனைவரும் திரையரங்கில் வந்து இந்த படத்தை பார்த்து ஆதரிக்கவும். நன்றி

நடிகர் YG மகேந்திரன் பேசியதாவது..,

முதலில் இறைவனுக்கு என் நன்றி. இத்தனை ஆண்டுகளாக பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்து வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. சமீப காலமாக எனக்கு வித்தியாசமான கதாபாத்திரங்கள் கிடைத்து வருவது மிகவும் சந்தோஷம். இந்த “நீ Forever” படத்தின் குழு ஒரு வெற்றி குழு என்று நான் நம்புகிறேன். இயக்குநர் அசோக் முதலில் கதையை சொன்னபோது அவருடைய நம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்தது. நல்ல கதையை நம்பிக்கையுடன் எடுத்திருக்கிறார்கள். இந்த படம் இளைஞர்களை நிச்சயமாக கவரும். பழமை மற்றும் புதுமை இரண்டையும் அழகாக இணைத்து இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். நல்ல கதை இருந்தால் சிறிய படங்களும் பெரிய வெற்றி பெறும் என்பதற்கு இது ஒரு உதாரணமாக இருக்கும். இசை, ஒளிப்பதிவு, காட்சியமைப்பு அனைத்தும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நம்புகிறேன். அனைவரும் திரையரங்கில் வந்து பார்த்து ஆதரிக்கவும். நன்றி

தயாரிப்பாளர் தங்கராஜ் பேசியதாவது..,

இந்த படத்தின் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் அனைவரும் சேர்ந்து ஒரு சிறப்பான படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். டிரெய்லரும் பாடல்களும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. தயாரிப்பாளர் புகழ் சார் இந்த படத்தை மிகவும் அழகாகவும், சீராகவும் தயாரித்திருக்கிறார். அவருடைய அர்ப்பணிப்பும் உழைப்பும் பாராட்டத்தக்கது. இசையமைப்பாளரின் பாடல்கள் மிகவும் அருமையாக இருக்கிறது. முழு குழுவினரின் முயற்சியும் தெளிவாக தெரிகிறது. இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். மேலும் புகழ் சார் தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த தயாரிப்பாளராக உயர வேண்டும் என்று விரும்புகிறேன். நன்றி.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது..,

சினிமாவை நேசிக்கும் ஒரு மனிதராக, இந்த படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் புகழ் சார் அவர்களின் முயற்சிக்கு நான் பாராட்டுகள் தெரிவிக்கிறேன். பல சவால்களை சந்தித்தும் அவர் தளராமல் மீண்டும் ஒரு நல்ல படத்தை கொண்டு வந்திருக்கிறார். இயக்குநர் அசோக் மற்றும் முழு குழுவினரும் சிறப்பாக வேலை செய்திருக்கிறார்கள். இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்று நம்புகிறேன். நடிகர்கள் சுதர்ஷன், அர்ச்சனா உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இசையும், நடனமும் மிகவும் நன்றாக அமைந்துள்ளது. இன்றைய சினிமா சூழலில் நல்ல படங்களுக்கு நாம் அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த துறை வளர்ச்சி அடையும். இப்படத்தை பார்த்த நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஓடிடி உரிமையை வாங்கியுள்ளது. நல்ல படமெடுத்தால் ஓடிடி வாங்கிக்கொள்கிறார்கள். அதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். தமிழ் சினிமாவில் பிரச்சனைகள் இருந்தாலும், நல்ல விஷயங்களும் இருக்கின்றன. இரண்டையும் சமநிலையாக பார்க்க வேண்டும். இன்றைய சினிமா சூழலில் நல்ல படங்களுக்கு நாம் அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த துறை வளர்ச்சி அடையும். எல்லாரும் திரையரங்கில் வந்து இந்த படத்தை பார்த்து ஆதரிக்கவும். நன்றி.

Natarajan Karuppiah

Share
Published by
Natarajan Karuppiah
Tags: Nee Forever

Recent Posts

“எல்லாமே கருப்ப சாமி பார்த்துகிட்டார்!” – ‘கருப்பு’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக் விழாவில் நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

சமீபத்தில் வெளியாகி தியேட்டர்களில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று வரும் திரைப்படம் 'கருப்பு'.

1 நாள் ago

“பரிமளா & கோ” பட பத்திரிகையாளர் சந்திப்பு !!

தமிழ் திரையுலகில் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரில்லர் காமெடி…

2 நாட்கள் ago

அர்ஜுன் தாஸின் ‘கான் சிட்டி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் மற்றும் அன்னா பென் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘கான் சிட்டி’…

3 நாட்கள் ago

தீபாவளி வெளியீட்டிற்கு தயாராகும் சிலம்பரசனின் ‘அரசன்’

தமிழ் சினிமாவின் 'மேன்மகன்' சிலம்பரசன் TR (STR) நடிப்பில், ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் திரைப்படம் 'அரசன்'.

4 நாட்கள் ago

விஷ்ணு விஷால் தயாரிப்பில் அவரது தம்பி அறிமுகமாகும் ‘Yellow Yellow Dirty Fellow’: கலர்ஃபுல் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்த விஷ்ணு விஷால், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'விஷ்ணு விஷால்…

5 நாட்கள் ago

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தெலுங்கு சினிமா: ரஹ்மான் ஓப்பன் டாக்

தமிழ், இந்தி எனப் பல்வேறு மொழிகளில் பிஸியாக இருந்தாலும், தெலுங்கு சினிமாவில் ஏ.ஆர்.ரஹ்மான் நேரடிப் படங்களை ஒப்புக்கொண்டு நீண்ட காலமாகிவிட்டது.

5 நாட்கள் ago