கே.ஜி.எஃப் நட்சத்திரம் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் அதிரடி படம் ‘டாக்சிக்’. இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் ஹுமா குரேஷி, நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் நடித்துள்ளனர். கே.ஜி.எஃப் படத்திற்கு இசையமைத்த ரவி பசூர் இப்படத்திற்கும் இசை அமைத்து வருகிறார். ‘டாக்சிக்: எ ஃபேரிடேல் ஃபார் க்ரோன்அப்ஸ்’ என்ற பெயரில் உருவாகும் இப்படம் 2026 மார்ச் 19-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், படக்குழு இன்று கியாரா அத்வானியின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதில் கியாரா ‘நாடியா’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. கோதிக் ஸ்டைலில் கம்பீரமாக தோன்றும் கியாராவின் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
யாஷ் – கியாரா கூட்டணியின் இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. படத்தின் அடுத்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்!
'அமரன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம்…
திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் நடிகை சுரேகா வாணி
JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான…
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மிருணாள் தாகூர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி காட்டுத்தீயாய்…
திரையுலகில் ஒரு இயக்குநராகவும், தொழில்நுட்பக் கலைஞராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
இந்திய இசையுலகின் அடையாளமாகத் திகழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க நீண்ட காலமாகப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு…