விஜய் பிறந்த நாளில் ‘ஜனநாயகன்’ டீசர்? வேறென்ன படக்குழுவினர்களின் திட்டங்கள்?

தளபதி விஜய் நடித்த கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், விரைவில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் ஆண்டுதோறும்  விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி,  அவர் நடிக்கும் படத்தின் அப்டேட் வெளியாகும் நிலையில், இந்த ஆண்டு ஜூன் 22ஆம் தேதி ‘ஜனநாயகன்’ படத்தின் டீசர் வெளியாகும் அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷல் விருந்தாக ரசிகர்களுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, இந்த படம் குறித்த வேறு சில திட்டங்களையும் படக்குழு அமைத்துள்ளது. ஆகஸ்ட் மாதம் ஃபர்ஸ்ட் சிங்கிள், அக்டோபர் மாதம் செகண்ட் சிங்கிள் மற்றும் புத்தாண்டு தினத்தில் டிரைலர் வெளியிடப்படும் என திட்டமிட்டுள்ளனர்.

அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ள ‘ஜனநாயகன்’ படம், விஜய்யின் கடைசி படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் வில்லனாக பாபி தியோல் நடித்திருக்கும் நிலையில்  மமிதா பாஜு, பிரியாமணி, கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், ஸ்டண்ட் இயக்குனராக அனல் அரசு, கலை இயக்குனராக செல்வகுமார், படத் தொகுப்பாளராக பிரதீப் ராகவ், உடை வடிவமைப்பாளராக பல்லவி, பப்ளிசிட்டி டிசைனராக கோபி பிரசன்னா ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். 

Natarajan Karuppiah

Recent Posts

காதல், குடும்ப உறவுகள் மற்றும் நகைச்சுவை கலந்த ‘லவ் ஆல்வேஸ்’ தொடரின் சுவாரசியமான டீசரை வெளியிட்டது ஜியோஹாட்ஸ்டார்

தென் கொரியாவின் தனித்துவமான கதைக் கருவை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், தமிழ் ஒரிஜினல்ஸில் முதன்முறையாக ஒரு கொரிய வெப்டூன்…

1 மாதம் ago

பதற்றம் உச்சத்தை எட்டியது! TTF வாசன் மற்றும் ஜேசனின் வாக்குவாதத்தால் பரபரப்பான Bigg Boss Tamil வீடு

Bigg Boss Tamil வீட்டில் படுக்கையறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த காலணிகள் தொடர்பாக ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு, TTF வாசன்…

1 மாதம் ago

கண்ணீர், கடினமான முடிவுகள் மற்றும் ஒரு விடைபெறல்: Bigg Boss Tamil வீட்டிலிருந்து லட்சுமி பிரியா வெளியேறினார்

Bigg Boss Tamil Season 10 நிகழ்ச்சியில், சிறப்பு நாமினேஷன் டாஸ்க்கைத் தொடர்ந்து லட்சுமி பிரியா Bigg Boss வீட்டிலிருந்து…

1 மாதம் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விஜய் சேதுபதி – “சூழல் புரியும் என நினைத்தேன்…”

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், கடந்த வாரம் தனது கருத்துகள் தொடர்பாக எழுந்து வரும்…

2 மாதங்கள் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: டாஸ்க்கில் வெடித்த பரபரப்பு – லட்சுமி பிரியா தள்ளியதில் காயமடைந்த ஆனந்தி!

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் நடைபெற்ற டாஸ்க் பரபரப்பான கட்டத்தை எட்டுகிறது. டாஸ்க்கின் போது லட்சுமி பிரியா,…

2 மாதங்கள் ago

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றம்

சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…

2 மாதங்கள் ago