நடிகர் ஆர்யா நடிக்கும் 36-வது படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கப்படும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், சற்று முன் அந்த டைட்டில் டீசர் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆர்யாவின் 36-வது திரைப்படத்திற்கு “அனந்தன் காடு” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஜி. என். கிருஷ்ணகுமார் இயக்கத்தில், முரளி கோபி எழுதிய கதையில், அஜனேஷ் லோக்நாத் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது. அதேபோல், யுவா ஒளிப்பதிவில், வரியத் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நிமிடத்திற்கு மேல் இருக்கும் இந்த டைட்டில் டீசரில், ஆர்யாவை நடுவில் முட்டி போட்டு உட்கார வைத்து, சுற்றி வில்லன்கள் அவரை கொலை செய்ய முயற்சி செய்யும் காட்சிகள், அதிரடி ஆக்சன் காட்சிகள் உட்பட பல காட்சிகள் உள்ளன. இதன் அடிப்படையில், இந்த படம் ஒரு முழுக்க முழுக்க ஆக்ஷன் படம் என்பது தெரிய வருகிறது. மேலும் அதிகாரத்திற்கு எதிராக போராடும் ஒரு கதாபாத்திரத்தில் தான் ஆர்யா நடித்துள்ளார் என டீசரில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
மேலும், இந்த படத்தில் நிகிலா விமல், இந்திரன்ஸ், உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென் கொரியாவின் தனித்துவமான கதைக் கருவை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், தமிழ் ஒரிஜினல்ஸில் முதன்முறையாக ஒரு கொரிய வெப்டூன்…
Bigg Boss Tamil வீட்டில் படுக்கையறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த காலணிகள் தொடர்பாக ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு, TTF வாசன்…
Bigg Boss Tamil Season 10 நிகழ்ச்சியில், சிறப்பு நாமினேஷன் டாஸ்க்கைத் தொடர்ந்து லட்சுமி பிரியா Bigg Boss வீட்டிலிருந்து…
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், கடந்த வாரம் தனது கருத்துகள் தொடர்பாக எழுந்து வரும்…
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் நடைபெற்ற டாஸ்க் பரபரப்பான கட்டத்தை எட்டுகிறது. டாஸ்க்கின் போது லட்சுமி பிரியா,…
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…