விஜய் கட்சி இன்னொரு பாஜக.. தவெகவில் இருந்து விலகிய இன்ஸ்டா பெண் பிரபலம்..!

“விஜய்யின் கட்சி இன்னொரு பாஜக எனக் கூறி, அந்தக் கட்சியில் இருந்த இன்ஸ்டா பிரபலம் வைஷ்ணவி விலகி திமுகவில் சேர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

“தமிழக வெற்றி கழகத்தில் ஒரு வருட காலம் பயணம் செய்திருந்தேன். அந்த கட்சியை பொறுத்தவரை, இளைஞர்களுக்கான அரசியல் செய்வார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். அதனால்தான் நான் உள்பட நிறைய இளைஞர்களும், இளம் பெண்களும் அந்தக் கட்சியில் சேர்ந்தோம். ஆனால் எங்களுக்கு அதிருப்தி தான் மிச்சமாயிற்று.

இளைஞர்களுக்கான அரசியல்  அந்தக் கட்சியில் அது சுத்தமாக இல்லை. எனவே, நான் அந்தக் கட்சியிலிருந்து விலகி, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளேன்.

மாண்புமிகு மேற்கு மண்டலத் தளபதி செந்தில் பாலாஜி முன்னிலையில், திமுகவில் இணைந்து கொண்டேன். தமிழக வெற்றிக் கழகத்தை பொருத்தவரை, அது இன்னொரு பாஜக என்பது தான் உண்மை.

இன்று முதல், இந்தத் திராவிட முன்னேற்றக் கழகம் வழியாக, என்னுடைய மக்கள் பணியை தொடர விரும்புகிறேன்” என்று வைஷ்ணவி கூறினார்.

Natarajan Karuppiah

Recent Posts

நிஜ வாழ்விலும் ‘லெஜண்ட்’ தான்! வறுமையில் வாடிய பாவா லட்சுமணனுக்கு ஓடி வந்து உதவிய லெஜண்ட் சரவணன்!

தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…

5 நாட்கள் ago

ஓடிடியில் ‘தி லெஜண்ட்’ சரவணனின் அதிரடி வேட்டை: பிரைம் வீடியோவில் ‘லீடர்’ படம் புதிய சாதனை!

தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,

2 வாரங்கள் ago

நடிகர் வாகை சந்திரசேகருக்கு மத்திய அரசின் உயரிய “யுவ புரஸ்கார்” தேசிய விருது அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…

2 வாரங்கள் ago

ஒரு பக்கம் மனதை நெகிழ வைத்த இசை… மறுபக்கம் மாடர்ன் மியூசிக் மேஜிக் – சாம் CS அசத்தல்!

இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.

2 வாரங்கள் ago

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு சுபாஷ் என்ற பெயரில் பிரம்மாண்டமான திரைப்படத்தை ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்தயாரிக்கிறது

இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை, பாரம்பரியம் மற்றும் சாதனைகளை…

2 வாரங்கள் ago

என் தாய் தந்தைக்குக்கூட இவ்வளவு கடமைப்பட்டதில்லை! – மிஷ்கின்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா (84), கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில்…

2 வாரங்கள் ago