‘என்னடா பொழப்பு இது’.. கையில் விளக்குமாறுடன் டான்ஸ் ஆடும் ரோஷிணி ஹரிபிரியன்..!

தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகை ரோஷினி ஹரிபிரியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்குமாறுடன் “என்னடா பொழப்பு இது” என்ற பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

’பாரதி கண்ணம்மா’ என்ற விஜய் டிவி தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை ரோஷினி ஹரிபிரியன். குறிப்பாக இந்த சீரியலில், அவர் பல மாதங்கள் நடந்து கொண்டே இருக்கும் காட்சி ஒன்று ஒரு பக்கம் சோகமாகவும், இன்னொரு பக்கம் கிண்டலுக்கும் உள்ளானது. அதனை தொடர்ந்து, ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’  சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடித்த ரோஷினி, குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

கடந்த ஆண்டு வெளியான சூரியின் ’கருடன்’ திரைப்படத்திலும் அவர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரோஷினிக்கு கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர்.

அப்போது தனது பாலோயர்களை திருப்தி செய்ய கிளாமர் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை ரோஷினி பதிவு செய்து வரும் நிலையில், சற்றுமுன் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கையில் விளக்குமாறுடன் டான்ஸ் ஆடுகிறார்; பின்னணியில் “என்னடா பொழப்பு இது” என்ற பாடலும் ஒலிக்கிறது. மேலும், சிறுவயதில் தான் டான்ஸராக ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது என்று குறிப்பிட்டு, தனது சிறிய வயது புகைப்படத்தையும் அந்த வீடியோவுடன் இணைத்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவலாக வைரலாகி உள்ளது.

Natarajan Karuppiah

Recent Posts

காதல், குடும்ப உறவுகள் மற்றும் நகைச்சுவை கலந்த ‘லவ் ஆல்வேஸ்’ தொடரின் சுவாரசியமான டீசரை வெளியிட்டது ஜியோஹாட்ஸ்டார்

தென் கொரியாவின் தனித்துவமான கதைக் கருவை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், தமிழ் ஒரிஜினல்ஸில் முதன்முறையாக ஒரு கொரிய வெப்டூன்…

4 வாரங்கள் ago

பதற்றம் உச்சத்தை எட்டியது! TTF வாசன் மற்றும் ஜேசனின் வாக்குவாதத்தால் பரபரப்பான Bigg Boss Tamil வீடு

Bigg Boss Tamil வீட்டில் படுக்கையறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த காலணிகள் தொடர்பாக ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு, TTF வாசன்…

4 வாரங்கள் ago

கண்ணீர், கடினமான முடிவுகள் மற்றும் ஒரு விடைபெறல்: Bigg Boss Tamil வீட்டிலிருந்து லட்சுமி பிரியா வெளியேறினார்

Bigg Boss Tamil Season 10 நிகழ்ச்சியில், சிறப்பு நாமினேஷன் டாஸ்க்கைத் தொடர்ந்து லட்சுமி பிரியா Bigg Boss வீட்டிலிருந்து…

1 மாதம் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விஜய் சேதுபதி – “சூழல் புரியும் என நினைத்தேன்…”

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், கடந்த வாரம் தனது கருத்துகள் தொடர்பாக எழுந்து வரும்…

1 மாதம் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: டாஸ்க்கில் வெடித்த பரபரப்பு – லட்சுமி பிரியா தள்ளியதில் காயமடைந்த ஆனந்தி!

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் நடைபெற்ற டாஸ்க் பரபரப்பான கட்டத்தை எட்டுகிறது. டாஸ்க்கின் போது லட்சுமி பிரியா,…

2 மாதங்கள் ago

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றம்

சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…

2 மாதங்கள் ago