விஜய் சேதுபதி நடிக்கும் முதல் ஆக்‌ஷன் வெப் சீரிஸ்: ‘காட்டான்’!

‘காக்கா முட்டை’ புகழ் மணிகண்டன் இயக்கத்தில் ஆக்‌ஷன் அவதாரம் எடுக்கும் மக்கள் செல்வன்

சென்னையில் சமீபத்தில் நடந்த ‘JioHotstar South Unbound’ நிகழ்வில், நடிகர் விஜய் சேதுபதி தான் தயாரித்து நடிக்கும் புதிய ஆக்‌ஷன் வெப் சீரிஸ் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

‘காக்கா முட்டை’ மற்றும் ‘கடைசி விவசாயி’ போன்ற யதார்த்தமான படங்களை இயக்கிய இயக்குனர் மணிகண்டன் இந்த சீரிஸை இயக்குகிறார். மணிகண்டன் இதுவரை ஆக்‌ஷன் கதைகளை இயக்கியிராத நிலையில், இது அவரது முதல் ஆக்‌ஷன் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

“காட்டான் கதை என்னுடைய நண்பன் மணிகண்டன் எழுதியது. நான் என்ஜாய் செய்து இந்த சீரிஸில் நடித்தேன். இந்த சீரிஸின் முதல் ஆறு பக்கத்தை படிக்கும்போது, அது எனக்குள் சென்று என்னை குணப்படுத்துவது போன்ற எண்ணத்தைக் கொடுத்தது,” என்று விஜய் சேதுபதி இந்நிகழ்ச்சியில் பேசினார்.

விஜய் சேதுபதியே தயாரித்து, மணிகண்டன் இயக்கத்தில் உருவாகும் இந்த ‘காட்டான்’ வெப் சீரிஸ், ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு ஒரு புதிய விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Natarajan Karuppiah

Recent Posts

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றம்

சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…

7 நாட்கள் ago

MP DEVELOPERS நிறுவனத்தின் பிராண்ட் தூதராக சமந்தா ரூத் பிரபு நியமனம்

சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…

4 வாரங்கள் ago

நிஜ வாழ்விலும் ‘லெஜண்ட்’ தான்! வறுமையில் வாடிய பாவா லட்சுமணனுக்கு ஓடி வந்து உதவிய லெஜண்ட் சரவணன்!

தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…

3 மாதங்கள் ago

ஓடிடியில் ‘தி லெஜண்ட்’ சரவணனின் அதிரடி வேட்டை: பிரைம் வீடியோவில் ‘லீடர்’ படம் புதிய சாதனை!

தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,

3 மாதங்கள் ago

நடிகர் வாகை சந்திரசேகருக்கு மத்திய அரசின் உயரிய “யுவ புரஸ்கார்” தேசிய விருது அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…

3 மாதங்கள் ago

ஒரு பக்கம் மனதை நெகிழ வைத்த இசை… மறுபக்கம் மாடர்ன் மியூசிக் மேஜிக் – சாம் CS அசத்தல்!

இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.

3 மாதங்கள் ago