விஜய் சேதுபதி நடிக்கும் முதல் ஆக்ஷன் வெப் சீரிஸ்: ‘காட்டான்’!
December 10, 2025 Published by Natarajan Karuppiah

‘காக்கா முட்டை’ புகழ் மணிகண்டன் இயக்கத்தில் ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் மக்கள் செல்வன்
சென்னையில் சமீபத்தில் நடந்த ‘JioHotstar South Unbound’ நிகழ்வில், நடிகர் விஜய் சேதுபதி தான் தயாரித்து நடிக்கும் புதிய ஆக்ஷன் வெப் சீரிஸ் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
‘காக்கா முட்டை’ மற்றும் ‘கடைசி விவசாயி’ போன்ற யதார்த்தமான படங்களை இயக்கிய இயக்குனர் மணிகண்டன் இந்த சீரிஸை இயக்குகிறார். மணிகண்டன் இதுவரை ஆக்ஷன் கதைகளை இயக்கியிராத நிலையில், இது அவரது முதல் ஆக்ஷன் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

“காட்டான் கதை என்னுடைய நண்பன் மணிகண்டன் எழுதியது. நான் என்ஜாய் செய்து இந்த சீரிஸில் நடித்தேன். இந்த சீரிஸின் முதல் ஆறு பக்கத்தை படிக்கும்போது, அது எனக்குள் சென்று என்னை குணப்படுத்துவது போன்ற எண்ணத்தைக் கொடுத்தது,” என்று விஜய் சேதுபதி இந்நிகழ்ச்சியில் பேசினார்.
விஜய் சேதுபதியே தயாரித்து, மணிகண்டன் இயக்கத்தில் உருவாகும் இந்த ‘காட்டான்’ வெப் சீரிஸ், ஆக்ஷன் ரசிகர்களுக்கு ஒரு புதிய விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




















