சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173-வது படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்து தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் குழப்பம் நீடிக்கிறது. கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை ஆரம்பத்தில் சுந்தர்.சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென சுந்தர்.சி இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகியதால், புதிய இயக்குநர் தேர்வில் ரஜினி-ராஜ்கமல் அணி தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
நவம்பர் 5-ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், சுந்தர்.சி-யின் விலகல் குறித்து கமல் ஹாசன் கூறுகையில், “இது ரஜினிக்கு கதை பிடிக்கும் வரை தேடல் தொடரும். புதிய இயக்குநரைத் தேர்ந்தெடுக்கலாம், இளம் இயக்குநராக இருக்கலாம்” என்று தெரிவித்தார். தகவல்களின்படி, ‘மகாராஜா’ படத்தை இயக்கிய நித்திலன் மற்றும் ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் ஆகியோர் தங்கள் கதைகளை ரஜினிக்கு விவரித்துள்ளனர். இந்த இருவரில் ஒருவர் தான் இயக்குநராக உறுதியாகியுள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையில், தனுஷ் இயக்குவதாகவும் சில ரூமெர் பரவியுள்ளன. ஆனால், உறுதியான தகவல்கள் இல்லை. ரஜினியின் பிறந்தநாள் (டிசம்பர் 12) அன்று இயக்குநர் மற்றும் கதை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. படம் 2027 பொங்கல் திரையிடலுக்கு தயாராகிறது.
தற்போது ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் முழு கவனம் செலுத்தி வரும் ரஜினி, அதை முடித்த பிறகு 173-வது படத்துக்கு தேதிகள் ஒதுக்கவுள்ளார். அதன் தொடர்ச்சியாக, ரஜினி-கமல் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்க உறுதியாகியுள்ளது. இந்தப் புராஜெக்ட் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், புதிய அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்கள்… ஸ்டே ட்யூண்ட்!
தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…
தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.
இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை, பாரம்பரியம் மற்றும் சாதனைகளை…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா (84), கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில்…