Download App

சிகரெட் குடிக்கும் நாலு வயது சிறுவன்!

May 27, 2025 Published by anbuselvid8bbe9c60f

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் நான்கு வயது சிறுவன் ஒருவன் சிகரெட் புகைக்கும் காட்சி சமுக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அந்த சிறுவனின் வாழ்க்கை சூழலை மாற்றும்  நடவடிக்கைகளை தாய்லாந்து அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

பாங்காக் நகரில் நகர்வலம் வந்த வழிப்போக்கர் ஒருவர் அங்குள்ள புகழ்பெற்ற ராமா பாலம் அருகே, ஒரு சிறுவன் கையில் சிகரெட்டை வைத்து புகைத்துக் கொண்டிருப்பதை பார்த்தார். உடனே அந்த நபர் சிகரெட் புகைக்கும் அந்த சிறுவனை வீடியோ எடுத்து தன் சமுக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்தார்.
இந்த வீடியோ வைரலாகத் துவங்கியதும் அந்த சிறுவன் குறித்து பலரும் கருத்துக்கள் தெரிவித்தனர், தாய்லாந்து அதிகாரிகளும் இந்த சிறுவன் குறித்த தகவல்களை விசாரித்து அவனைக் கண்டுபிடித்தனர்.

வீடற்றவர்களான அந்த சிறுவனின் பெற்றோர் சாலையோரம் மறைப்புகளோ தடுப்புகளோ இல்லாத ஓரு இடத்தில் வசித்து வருகின்றனர்.சிறுவனின் தந்தை உடல்நலம் குன்றியவராகவும் வேலை செய்ய இயலாதவராகவும் இருப்பதால் வறுமையின் பிடியில் சிக்கியிருக்கும் அந்த குடும்பத்தால் அந்த சிறுவனை பள்ளிக்கு அனுப்ப முடியாத நிலையில் உள்ளனர். தற்போது சமுக நலன்மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகள் சிறுவனை குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பியதோடு அவனை பள்ளியில் சேர்க்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

More News

Trending Now

No trending articles in this category from the last 3 days.