நடிகர் நெப்போலியன் வீட்டில் மகிழ்ச்சி வெள்ளம்! மகன் தனுஷ் – அக்ஷயா தம்பதியின் முதல் திருமண நாள் கொண்டாட்டம்… வைரல் வீடியோ!
கார்த்திகை 10, 2025 Published by anbuselvid8bbe9c60f

தமிழ் சினிமா மற்றும் அரசியலில் பிரபலமான நடிகர் நெப்போலியன் வீட்டில் இனிய விசேஷம்! அவரது மூத்த மகன் தனுஷ் மற்றும் மருமகள் அக்ஷயா தம்பதியின் முதலாம் ஆண்டு திருமண நாள் அமெரிக்காவில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர், நண்பர்களுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை நெப்போலியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த ஆண்டு ஜப்பானில் வெகு விமரிசையாக நடைபெற்ற தனுஷ் – அக்ஷயா திருமணத்தில் நடிகர் சரத்குமார், ராதிகா, மீனா, சுகாசினி, கலா மாஸ்டர், குஷ்பூ, கார்த்தி, பாண்டியராஜன் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர். தனுஷின் தசை சிதைவு நோய் (Muscular Dystrophy) காரணமாக விமானத்தில் பயணிக்க முடியாததால், கப்பல் மூலம் ஜப்பானுக்கு சென்று நெப்போலியன் திருமணத்தை பிரமாண்டமாக நடத்தியது அப்போது பெரும் பாராட்டை பெற்றது.
திருமணத்திற்கு பின் சிலர் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் தெரிவித்தாலும், தனுஷ் – அக்ஷயா தம்பதி மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் தீபாவளியை கொண்டாடிய வீடியோவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இப்போது முதல் திருமண நாளில் மாலை மாற்றி, கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவை பகிர்ந்த நெப்போலியன், உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த இனிய தருணத்திற்கு தனுஷ் – அக்ஷயா தம்பதிக்கு வாழ்த்துக்கள்!
















