திரைப்பட செய்திகள்

நடிகராகவே மக்களுக்கு நல்லது செய்யலாம்: அரசியலுக்கு வர தேவையில்லை – சிவராஜ்குமார் திட்டவட்டம்

கர்நாடக சினிமாவின் மூத்த நட்சத்திர நடிகர் சிவராஜ்குமார், அரசியலுக்கு வருவது குறித்து தனது தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். நடிகராக இருந்துகொண்டே மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்பதால், அதிகாரத்துக்காக அரசியலுக்கு வர வேண்டிய அவசியமில்லை என்று அவர் கூறியுள்ளார்.

சிவராஜ்குமார், உபேந்திரா நடிப்பில் உருவாகி வரும் ’45’ திரைப்படத்தின் இசையமைப்பாளரும் இயக்குநருமான அர்ஜுன் ஜன்யா இயக்கியுள்ளார். இப்படத்தில் ராஜ் பி. ஷெட்டி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். வரும் டிசம்பர் 25-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு டிசம்பர் 22-ம் தேதி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சிவராஜ்குமாரிடம் ஒரு செய்தியாளர் கேள்வி ஒன்றை எழுப்பினார்: “தமிழ்நாட்டில் எம்ஜிஆர் காலம் தொட்டு விஜயகாந்த், சரத்குமார், விஜய் போன்ற நட்சத்திர நடிகர்கள் அரசியலுக்கு வருகின்றனர். அதேபோல கர்நாடகாவில் நீங்களும் உபேந்திராவும் அரசியலுக்கு வரவில்லை. ஏன்?” என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த சிவராஜ்குமார், “அரசியல் பற்றி எனக்கு தெரியாது. மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்துகொண்டுதான் இருக்கிறோம். நாங்கள் யாருக்கு வேண்டுமானாலும் உதவி செய்யலாம். மக்களுக்கு நல்லது செய்ய நடிகர்களுக்கு அதிகாரம் அவசியமில்லை. நடிகராக இருந்துகொண்டே நல்லது செய்யலாமே, இதற்கு ஏன் அரசியலுக்கு வர வேண்டும்? இது என்னுடைய பணம். யாரிடமும் பாரபட்சம் பார்க்காமல் உதவி செய்வேன்” என்று உறுதியாகப் பேசினார்.

சிவராஜ்குமாரின் இந்தப் பதில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ’45’ படத்துக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ள நிலையில், அவரது இந்தக் கருத்து கர்நாடக சினிமா வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

anbuselvid8bbe9c60f

Share
Published by
anbuselvid8bbe9c60f

Recent Posts

திமுகவின் 8,000 ரூபாய் கூப்பன் அறிவிப்பின் முக்கியத்துவம் என்ன?

திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வழங்கிவரும் நலத்திட்டங்களை விரிவுபடுத்தியும் பல புதிய வாக்குறுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. வீட்டு உபயோகப் பொருட்கள்…

2 நாட்கள் ago

கருத்துக் கணிப்புகளில் முந்தும் திமுக கூட்டணி! அதிமுகவா? தவெகவா? யாருக்கு இண்டாவது இடம்?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பல்வேறு முன்னணி தேர்தல் ஆய்வு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்புகள் ஆளும்…

4 நாட்கள் ago

மகளிர் உரிமைத் தொகையை 2000 ரூபாயாக உயர்த்தும் திமுகவின் அறிவிப்பு மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது!

தமிழ்நாடு சமூக நீதியிலும், விளிம்பு நிலை மக்களின் நலன் காக்கும் திட்டங்களிலும் எப்போதும் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. அந்த…

5 நாட்கள் ago

தேர்தல் களத்தில் வேகமெடுக்கும் இந்தி சர்ச்சை! தமிழ் வளர்ச்சிக்குத் திமுக அரசின் பங்களிப்பு என்ன?

தமிழ்நாடு தேர்தல் களம் தலைவர்களின் பிரச்சாரங்களால் சூடுபறக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தில் மீண்டும் இந்தி திணிப்பு சர்ச்சை பேசுபொருளாகியிருக்கிறது. மத்திய கல்வித்துறை…

6 நாட்கள் ago

வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க திமுக 8000 ரூபாய் கூப்பன் அறிவிப்பு: கவர்ச்சி அறிவிப்பா? தொலைநோக்கு திட்டமா?

திமுக வெளியிட்டுள்ள சமீபத்திய தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல நலத்திட்டங்களை விரிவுபடுத்தியதுடன்,…

6 நாட்கள் ago

விமல் – நட்டி இணையும் ‘வடம்’ சன் NXT-இல் பிரம்மாண்ட வெளியீடு!

சில கதைகள் வெறும் பொழுதுபோக்காக மட்டுமே இருக்கும். ஆனால் ‘வடம்’ அதைவிட ஆழமான அனுபவமாக மாறுகிறது அது பார்வையாளர்களை முழுமையாக…

1 வாரம் ago