Download App

கேன்சருக்கு எதிராக அணி திரண்ட மர்லின் மன்றோக்கள்!

May 26, 2025 Published by anbuselvid8bbe9c60f

அயர்லாந்தின் டப்ளின் கடற்கரையில் மர்லின் மன்றோவைப்போல தோற்றமளித்த 200 பெண்கள் மருத்துவத் துறைக்கு உதவும் நல்லெண்ண முயற்சியாக நீச்சல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ரெட்ரோ ஸ்விம்ஸூட்டும், பொன்னிற விக்’கும் அணிந்து திரைப்பட நாயகி மர்லின் மன்றோவைப் போல டப்ளின் மாகாணத்தில் டோனபேட் பகுதியில் பால்கர்ரிக் கடற்கரையில் ”மெர்லின் மட்டேர் பேடுல் 2025” நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

சென்ற ஆண்டு தொடங்கப் பட்ட இந்த நிகழ்ச்சி, இரண்டாவது ஆண்டாக, நேற்று ஞாயிறன்று நடந்த இந்த நிகழ்ச்சி டப்ளின் மட்டேர் மருத்துவமனையில் மகளிர் புற்றுநோய் பராமரிப்புக்காக நிதி திரட்டும் வகையில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. புற்றுநோயை கண்டறிவதிலும், சிகிட்சை முறைகளை மேம்படுத்தி  அயர்லாந்து மகளிருக்கு உலகத் தரம் வாய்ந்த சிகிட்சைகளை அளிப்பதிலும், மருத்துவமனைக்கு உதவுவதற்காக நிதி திரட்டுவது தான் இந்நிகழ்ச்சியின் குறிக்கோள். 
மருத்துவமனை நிர்வாகத்தின் மேம்பாட்டு இயக்குனர் ராய்ஸின் டஃபி இது குறித்து கூறுகையில்,” எங்கள் ஸ்தாபனம் நான்கு முக்கியமான பகுதிகளை மனதில் கொண்டு செயல்படுகிறது.அவை:  உயிர்காக்கும் கருவிகள், மருத்துவமனை மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் புதிய முயற்சிகள், நோயாளிகள் மற்றும் குடும்ப ஆதரவு.  இவற்றின் மூலம்,  புற்றுநோயாளிகளுக்கு ஐவி ட்ரிப் போன்ற சிறிய பொருட்கள் முதல் டைஸன் ஃபேன்ஸ், அல்லது மிகவும் மேம்பட்ட நவீன மேமோக்ராம் இயந்திரங்கள் வரை அளிக்க திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.  

மேலும் அவர் கூறுகையில்,” சிஸ்டர்ஹூட் ஆஃப் மர்லின்ஸ் என்னும் இந்த அமைப்புக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம். மகளிர் புற்றுநோய் சிகிட்சை மேம்பட்டுக்காக அவர்கள் இந்த கடற்கரையில் கூடியது ஒரு உன்னதமான நிகழ்வு. மர்லின் மட்டேன் பேடுல் என்ற நீசல் நிகழ்ழ்சி ஒரு ஹாலிவுட் அம்சத்துடன் வேடிக்கைக்காக நடத்த்ப் பட்டது போல தெரியலாம். ஆனால், இது ஒரு உன்னத நோக்கத்துடன் நடத்தப் பட்ட நீச்சல் நிகழ்ச்சி. இதன் மூலம் திரட்டப் பட்ட ஒவ்வொரு நன்கொடையும், எங்கள் மட்டேர் மருத்துவமனையில் புற்றுநோயுடன் போராடும் பெண்களுக்கு சிகிட்சையளிக்க எங்களுக்கு பெருமளவில் உதவப் போகிறது” என்றார். 
 

More News

Trending Now

No trending articles in this category from the last 3 days.