காவல் நிலையத்தில் கழிந்த மறக்கமுடியாத பிறந்த நாள்

சில கேடி பில்லா கில்லாடி ரங்காக்கள் தங்கள் பிறந்த நாளை நண்பர்கள் சூழ அலப்பறை செய்து பட்டாக்கத்தியால் கேக்குகளை  வெட்டி போலிஸ் காவலுக்கு போனதை பார்த்திருக்கிறோம். 

அதே போன்று தன் பிறந்த நாள் கேக்கையும் வாளால் வெட்டி கொண்டாடிய ஒருவர் இரு தினங்களுக்கு முன், பெங்களூரு காவல் துறையினரால் கைது செய்யப் பட்டிருக்கிறார்.

கர்நாடகாவில் சிக்கபல்லப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனில்குமார் என்ற ஒரு ஆட்டோ டிரைவர் தன் பிறந்த நாளையொட்டி  நண்பர்களும், குடும்பமும் புடை சூழ, துப்பாக்கிக் குண்டுகளை அடுக்கியது போன்ற  அமைப்பில் வடிவமைக்கப் பட்ட கேக்கை  நீண்ட வாள் கொண்டு வெட்டி, பிறந்த நாளைக் கொண்டாடினார்.

இந்த வீடியோவை அவர் சமுக ஊடகங்களில் பகிர அந்த வீடியோ வைரலானது . வீடியோ காவல்துறை கவனத்துக்கு வந்ததும் போலிசார் அனில் குமாரை தேடிவந்து பிடித்துச் சென்றனர்.

இதுவரை எந்த குற்ற பின்னணியும் இல்லாத அனில்குமார், தாம் பிறந்தநாள் உற்சாகத்தில் அவ்வாறு செய்ததாக  காவல்துறையினரிடம் கூறினார். 

  ”முறையான உரிமம் இல்லாமல் பொது இடத்தில் வாளைப் போன்ற பெரிய ஆயுதங்களை பயன்படுத்துவது இந்திய ஆயுதச் சட்டத்திற்கு எதிரானது. ஆகையால் அது ஒரு குற்றச் செய்லாகக் கருதப்படுகிறது. இத்தகைய செயல்கள் பொதுமக்களிடையே பயத்தையும், பீதியையும் தூண்டும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது” என்று எச்சரித்த காவல்துறையினர் அவர்மீது வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.

anbuselvid8bbe9c60f

Recent Posts

காதல், குடும்ப உறவுகள் மற்றும் நகைச்சுவை கலந்த ‘லவ் ஆல்வேஸ்’ தொடரின் சுவாரசியமான டீசரை வெளியிட்டது ஜியோஹாட்ஸ்டார்

தென் கொரியாவின் தனித்துவமான கதைக் கருவை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், தமிழ் ஒரிஜினல்ஸில் முதன்முறையாக ஒரு கொரிய வெப்டூன்…

4 வாரங்கள் ago

பதற்றம் உச்சத்தை எட்டியது! TTF வாசன் மற்றும் ஜேசனின் வாக்குவாதத்தால் பரபரப்பான Bigg Boss Tamil வீடு

Bigg Boss Tamil வீட்டில் படுக்கையறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த காலணிகள் தொடர்பாக ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு, TTF வாசன்…

1 மாதம் ago

கண்ணீர், கடினமான முடிவுகள் மற்றும் ஒரு விடைபெறல்: Bigg Boss Tamil வீட்டிலிருந்து லட்சுமி பிரியா வெளியேறினார்

Bigg Boss Tamil Season 10 நிகழ்ச்சியில், சிறப்பு நாமினேஷன் டாஸ்க்கைத் தொடர்ந்து லட்சுமி பிரியா Bigg Boss வீட்டிலிருந்து…

1 மாதம் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விஜய் சேதுபதி – “சூழல் புரியும் என நினைத்தேன்…”

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், கடந்த வாரம் தனது கருத்துகள் தொடர்பாக எழுந்து வரும்…

2 மாதங்கள் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: டாஸ்க்கில் வெடித்த பரபரப்பு – லட்சுமி பிரியா தள்ளியதில் காயமடைந்த ஆனந்தி!

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் நடைபெற்ற டாஸ்க் பரபரப்பான கட்டத்தை எட்டுகிறது. டாஸ்க்கின் போது லட்சுமி பிரியா,…

2 மாதங்கள் ago

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றம்

சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…

2 மாதங்கள் ago