Download App

திராவிட மாடல் அரசு – தொழில் துறை வளர்ச்சியால் படைத்த பொருளாதார சாதனை

சித்திரை 13, 2026 Published by premkumar6c8c7c1bc8

திமுக எப்போது எல்லாம் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தொழில்துறை அசுர வளர்ச்சி கண்டு, பொருளாதாரத்தில் சாதனை படைக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டை தொழில்துறையில் ஈர்த்த முதலீடுகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியால் முன்னணி மாநிலமாக மாற்றியுள்ளார் நம் முதலமைச்சர் அவர்கள். இந்த கட்டுரையில் வரும் புள்ளிவிவரங்கள் அனைத்தும் ஒன்றிய அரசு பல்வேறு தளங்களில் வெளியிட்டுள்ள தரவுகளே ஆகும்.

இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநில பொருளாதாரமான தமிழ்நாடு, தற்போது வளர்ச்சி பட்டியலில் முதலிடத்தை நோக்கி முன்னேறியுள்ளது. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி, 2024–25 ஆம் ஆண்டில் 11.2% உண்மையான பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்து, அனைத்து மாநிலங்களிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த இரட்டை இலக்க வளர்ச்சி, கடந்த 14 ஆண்டுகளில் மாநிலத்தின் சிறந்த வளர்ச்சியாகும். கடைசியாக 2010–11 இல் 13.1% வளர்ச்சி பதிவு செய்யப்பட்டது. இது 6.5% என்ற தேசிய சராசரியை விட மிகவும் அதிகம்.

உற்பத்தித்துறையில் மிக உயர்ந்த வளர்ச்சி விகிதம் இந்த அசாதாரண வளர்ச்சிக்கு முக்கிய காரணம் இரண்டாம் நிலைத்துறையாகிய உற்பத்தி, கட்டுமானம் மற்றும் பயன்பாட்டுத் துறைகள் ஆகும். உற்பத்தித் துறை 2023-24ல் 12.6% மற்றும் 2024-25ல் 14.7% என மிக உயர்ந்த வளர்ச்சி விகிதங்களைக் கண்டு, மாநிலத்தின் முக்கிய வளர்ச்சி இயந்திரமாகத் திகழ்கிறது. தேசிய மற்றும் பிற மாநிலங்களின் தரவுகளுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் உற்பத்தித்துறை தனித்து நிற்கிறது. 2024-25ல் இந்தியாவின் உற்பத்தித்துறை வளர்ச்சி 4.5% ஆக மட்டுமே இருந்த போது, தமிழ்நாடு மிக மிக அதிகமாக 14.7% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதே போல், தமிழ்நாட்டின் கட்டுமானத்துறை வளர்ச்சியும் தேசிய சராசரியான 9.4% ஐ விட 11.56% என அதிகமாக உள்ளது.

இந்திய அரசின் 2023–24 ஆண்டு தொழில் துறை கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் உள்ள அனைத்து தொழிற் சாலை தொழிலாளர்களில் 15.24% உடன் தமிழ்நாடு தொழில்துறை வேலை வாய்ப்பில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது! இது நாட்டின் ஆறு தொழிற்சாலை தொழிலாளர்களில் ஒருவர், இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 5-6% மட்டுமே!
தமிழ்நாடு மீண்டும் ஒருமுறை 40,100 க்கும் மேற்பட்டவைகளுடன் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான தொழிற் சாலைகளைக் கொண்ட மாநிலமாக உருவெடுத்துள்ளது. அதாவது தேசிய பங்கில் 15.43%.

தொழில் வளர்ச்சி – தரவுகள் சொல்லும் உண்மைகள்

கடந்த 12 ஆண்டுகளில் Make in india என மோடியின் தலைமையிலான இந்திய அரசு முன்னெடுத்த திட்டம் கைகொடுக்காமல் 16% அளவிற்கு உற்பத்தி சரிந்தாலும், தமிழ்நாடு அதற்கு நேரெதிராக வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது. சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களின் முதல் தேர்வு தமிழ்நாடாக உள்ளது. ஆப்பிள் அதன் ஸ்ரீ பெரும்புதூர் தொழிற்சாலையை விரிவுபடுத்தி வருகிறது. உலகளவில் விற்பனையாகும் I-Phone களில் 13% இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. இந்தியாவில் தயாரிக்கப்படும் 100 I-Phone களில் 75 I-Phone கள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுபவை. இது இரு மடங்காக உயரும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இந்திய அரசு நொய்டா, நியூ டெல்லி ஆகிய இடங்களில் மாநியங்களை வாரிகொடுத்து Electronics manufacturing industry களை துவங்க முயசிக்கும் போது தமிழ்நாட்டிற்கு அந்த மானியங்களே தேவைப்படாத உயரத்திற்கு வளர்ந்து விட்டது என நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் இது பற்றி கூறும் போது “நாங்கள் இந்திய மாநிலங்களை எங்களை ஒப்பிடுவ தில்லை, உலகின் வளர்ந்த ஸ்கேண்டினேவியன் நாடுகளின் தொழில் வளர்ச்சியோடு போட்டி போட விரும்புகிறோம்.. அதோடு, இந்திய அளவில் தொழிற் சாலையில் பணி புரியும் பெண்களில் 43% பெண்கள் தமிழ்நாட்டில் உள்ளவர்கள், இது இந்திய மக்கள் தொகையில் 5 % என்றார்..” 2006 திமுக ஆட்சியில் போடப்பட்ட அடித்தளம் தான் மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னோடியாக திகழகாரணம் என் நியூயார்க் டைம்ஸ் பாராட்டி உள்ளது.

1996 திமுக ஆட்சியில் ஹூண்டாய் தொழிற் சாலையை நிறுவியது, இந்தியா வெளிநாட்டு முதலீட்டிற்கு அனுமதி கொடுத்த உடனேயே, தமிழ்நாடு அதன் முதல் ஆளாய் மாநில மேம்பாட்டு நிறுவனத்தை உருவாக்கியது. கண்ணாடித் தயாரிப்பு மற்றும் அடிப்படை மின்சாதனப் பொருட்கள் தயாரிக்கப்பட்டன. இடையில் ஏற்பட்ட ஒரு தொய்விற்கு பின் தற்போது மீண்டும் வளர்ச்சியடைய தொடங்கி உள்ளது . ஏற்கனவே சென்னையில் கார் உற்பத்தி, கோவையில் மோட்டார் பம்ப், திருப்பூர் டிசர்ட், சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலை என தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி வளர்ந்த நாடுகளோடு போட்டி போடும் வகையில் உள்ளது. அதோடு தற் போது ஐ போன் தொடங்கி மலிவான காலணி தயாரிப்பு வரை பல மடங்கு தொழில் வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது 130க்கும் மேற்பட்ட Fortune 500 என அழைக்கப்படும் பெரும் நிறுவனங்கள் வணிகம் செய்து வருகின்றன.

தொழில் மட்டு மல்லாது தொழிலாளர் நலனிலும், அவர்களுக்கான வசதிகளை செய்து கொடுப்பதிலும் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது தமிழ்நாடு என நியூயார்க் டைம்ஸ் இதழ் தமிழ்நாட்டையும் திமுக அரசையும் பாராட்டி உள்ளது. இந்தியாவின் 2024-25ம் நிதியாண்டில், ஜவுளி ஏற்று மதியில் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை முந்தி, தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. நாட்டின் மொத்த ஜவுளி ஏற்று மதியில் தமிழ்நாடு 26.81 % பங்களிப்புடன், 7.99 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஜவுளிப் பொருட்களை ஏற்றுமதி செய்து முதலிடம் வகிக்கிறது. 2020-21ம் நிதியாண்டில் 6,193.39 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த தமிழ் நாட்டின் ஜவுளி ஏற்றுமதி, 2024-25ம் நிதியாண்டில் 7,997.17 மில்லியன் அமெரிக்கடாலராக உயர்ந்து, 29 % வளர்ச்சியை எட்டியுள்ளது. குஜராத் 5.65 பில்லியன்டாலர் ஏற்றுமதியுடன் இரண்டாம் இடத்திலும், மகாராஷ்டிரா மூன்றாம் இடத்திலும் உள்ளன. முந்தைய நிதியாண்டில் 20.78% ஆக இருந்த தமிழ்நாட்டின் பங்களிப்பு, இந்த நிதியாண்டு 26.81% ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு அரசின் ஊக்குவிப்புடன், கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் போன்ற ஜவுளி மையங்களின் சிறப்பான செயல்பாடு மற்றும் ஏற்றுமதி சார்பு கொள்கைகள் இதற்கு முக்கிய காரணங்கள் ஆகும். திராவிட மாடல் 2.0 ஆட்சியில் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலர் என்ற பொருளாதார இலக்கைத் தொடும் என எதிர் பார்க்கப்படுகிறது. ஒன்றிய பாஜக அரசு போல வாயிலேயே வடை சுடாமல் எதிரிகளும் வியக்கும்வ ண்ணம் தொழில் துறையில் புரட்சி செய்து பொருளாதார சாதனைகளை படைத்துள்ளது ஸ்டாலின் அரசு.

More News

Trending Now

No trending articles in this category from the last 3 days.