அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் மற்றும் அன்னா பென் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘கான் சிட்டி’ (Con City) திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் இன்று அறிவித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் ஜூன் 26-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் (Power House Pictures) தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம், ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தின் வாழ்வியலை மையமாகக் கொண்ட விறுவிறுப்பான மற்றும் நகைச்சுவை கலந்த ஃபேமிலி கமர்ஷியல் என்டர்டெய்னராக தயாராகியுள்ளது.
நகர வாழ்க்கையில் பெரும் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு நடுத்தரக் குடும்பத்தை சுற்றியே இப்படத்தின் கதை நகர்கிறது. ஒரு இக்கட்டான சூழ்நிலையில், படத்தின் நாயகனான அர்ஜுன் தாஸின் கையில் ஒரு விசித்திரமான ரசீது இயந்திரம் (Receipt Printer) கிடைக்கிறது.
அதிர்ச்சியூட்டும் விதமாக, அந்த இயந்திரத்தில் பட்டனை தட்டினால் 500 ரூபாய் நோட்டுகள் கொட்டத் தொடங்குகின்றன. இந்த விசித்திர இயந்திரம் அந்த குடும்பத்தின் கைகளில் சிக்கிய பிறகு, அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள், அதனால் வரும் பேராபத்துகள் மற்றும் நகைச்சுவையான சம்பவங்களை மிகவும் புதுமையான பாணியில் இயக்குநர் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் அர்ஜுன் தாஸ், அன்னா பென் ஆகியோருடன் இணைந்து யோகி பாபு ,வடிவுக்கரசி, குழந்தை நட்சத்திரம் அகிலன்,மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளியான ‘ரா ரா ரங்கையா’ மற்றும் ‘நான் தான் கிங்கு’ ஆகிய பாடல்கள் மற்றும் படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.
திரையரங்கு ரிலீசுக்கு முன்பே, ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் டிஜிட்டல் ஓடிடி (OTT) உரிமையை பிரபல முன்னணி நிறுவனமான நெட்பிளிக்ஸ் (Netflix) கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது இறுதிக்கட்ட டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஜூன் 26 முதல் திரையரங்குகளில் ரசிகர்களுக்கு ஒரு செம்ம என்டர்டெயின்மென்ட் விருந்து காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை!
தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…
தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.
இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை, பாரம்பரியம் மற்றும் சாதனைகளை…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா (84), கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில்…