Download App

ஆர்யாவின் 36வது படம்.. டைட்டில் டீசர் வீடியோ ரிலீஸ்..!

ஆனி 9, 2025 Published by Natarajan Karuppiah

நடிகர் ஆர்யா நடிக்கும் 36-வது படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கப்படும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், சற்று முன் அந்த டைட்டில் டீசர் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆர்யாவின் 36-வது திரைப்படத்திற்கு “அனந்தன் காடு” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஜி. என். கிருஷ்ணகுமார் இயக்கத்தில், முரளி கோபி எழுதிய கதையில், அஜனேஷ் லோக்நாத் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது. அதேபோல், யுவா ஒளிப்பதிவில், வரியத் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நிமிடத்திற்கு மேல் இருக்கும் இந்த டைட்டில் டீசரில், ஆர்யாவை நடுவில் முட்டி போட்டு உட்கார வைத்து, சுற்றி வில்லன்கள் அவரை கொலை செய்ய முயற்சி செய்யும் காட்சிகள், அதிரடி ஆக்சன் காட்சிகள் உட்பட பல காட்சிகள் உள்ளன. இதன் அடிப்படையில், இந்த படம் ஒரு முழுக்க முழுக்க ஆக்ஷன் படம் என்பது தெரிய வருகிறது. மேலும் அதிகாரத்திற்கு எதிராக போராடும் ஒரு கதாபாத்திரத்தில் தான் ஆர்யா நடித்துள்ளார் என டீசரில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

மேலும், இந்த படத்தில் நிகிலா விமல், இந்திரன்ஸ்,  உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

Trending Now

No trending articles in this category from the last 3 days.