Download App

பிக் பாஸ் ஜூலிக்கு ஜல்லிக்கட்டு நாளில் கல்யாணம்: திருமண தேதி உறுதி!

மார்கழி 30, 2025 Published by anbuselvid8bbe9c60f

julie

2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சென்னை மெரினா கடற்கரையில் திரண்ட மக்களுடன் இணைந்து குரல் கொடுத்து பிரபலமானவர் ஜூலி (மரியா ஜூலியானா). செவிலியராக பணியாற்றிய இவர், போராட்டத்தில் எழுப்பிய முழக்கங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, விஜய் டிவியின் பிக் பாஸ் தமிழ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

julie1

பிக் பாஸ் மூலம் மேலும் புகழ்பெற்ற ஜூலி, அதன்பிறகு விளம்பரங்கள், திரைப்படங்கள் என பிஸியாகி, கதாநாயகியாகவும் ஒரு படத்தில் நடித்தார். தற்போது சில படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன.

இந்நிலையில், இம்மாதம் முதல் வாரம் தனது நிச்சயதார்த்தம் நடந்ததாக சமூக வலைதளங்களில் அறிவித்திருந்தார் ஜூலி. தனது காதலர் முகமது ஜக்ரீம் என்பவரை மணக்கப்போவதாகவும், திருமண தேதி விரைவில் அறிவிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

julie2

தற்போது திருமண தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் 2026 ஜனவரி 16-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை, சென்னை பரங்கிமலை செயின்ட் பேட்ரிக் சர்ச்சில் திருமணம் நடைபெற உள்ளது. அதே நாள் இரவு 7 மணிக்கு பிறகு, அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வட்டாரத்தில் அழைப்பிதழ்கள் விநியோகிக்க தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

julie3

குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், தமிழகத்தில் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு அடுத்த சில நாட்களிலேயே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் புகழ்பெற்ற ஜூலிக்கு, அத்தகைய சிறப்பு வாய்ந்த காலகட்டத்தில் திருமணம் நடைபெற உள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜூலிக்கும், முகமது ஜக்ரீமுக்கும் திருமண வாழ்த்துகள்!

Trending Now