விக்ரம் பிரபு மற்றும் அறிமுக நடிகர் எல்.கே. அக்ஷய் குமார் நடிப்பில், கடந்த டிசம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கும் ‘சிறை’ திரைப்படத்தை புகழ்பெற்ற இயக்குநர் சங்கர் பாராட்டியுள்ளார்.
‘டாணாக்காரன்’ பட இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ள இப்படத்தை ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்துள்ளார். படத்தில் விக்ரம் பிரபு, எல்.கே. அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்நிலையில், இயக்குநர் சங்கர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் ‘சிறை’ படத்தைப் பற்றி நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அவரது பதிவில்,
“‘சிறை’ உண்மையிலேயே ஒரு சிறந்த படம். நிறைய இடங்களில் கண்ணீர் சிந்தினேன். படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும், அவற்றில் நடித்த நடிகர்களின் நடிப்பும் படம் முடிந்த பிறகும் மனதில் நீங்காமல் நிலைத்து நின்றன.
விக்ரம் தனது நடிப்பால் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார் ஆகியோரின் நடிப்பு அவர்களது கதாபாத்திரங்களின் அப்பாவித்தனத்தையும் உணர்வுகளையும் அழகாகப் பிரதிபலித்தது.
இந்த அருமையான படத்தை நமக்கு வழங்கிய தயாரிப்பாளர் லலித்குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இயக்குநர் சுரேஷ் தனது முதல் படத்திலேயே நம் மனங்களை ‘சிறை’ பிடித்துவிட்டார்.
இறுதிக்காட்சியில் சொல்லப்பட்ட செய்தி மிகவும் வலுவானதாகவும், இன்றைய காலத்திற்கு மிகவும் பொருத்தமானதாகவும் இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
‘சிறை’ படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாகவும், போலீஸ் அதிகாரியும் கைதியும் இடையேயான பயணத்தில் நடக்கும் உணர்வுப்பூர்வமான சம்பவங்களை மையப்படுத்தியுள்ளதாகவும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. இயக்குநர் சங்கரின் இந்த பாராட்டு படக்குழுவினருக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல ஹாரர்-காமெடி தொடரான 'காஞ்சனா' சீரிஸின் நான்காம் பாகமான #Kanchana4 படத்தை நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பில் தீவிர கவனம் செலுத்தி…
இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சமந்தா உள்ளிட்டோர் நடித்த 'சூப்பர் டீலக்ஸ்' (2019) விமர்சன…
நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகி, அவரது கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட 'ஜனநாயகன்' வரும் ஜனவரி 9-ம் தேதி உலகம் முழுவதும்…
இம்மாதம் முதல் வாரம் தனது நிச்சயதார்த்தம் நடந்ததாக சமூக வலைதளங்களில் அறிவித்திருந்தார் ஜூலி. தனது காதலர் முகமது ஜக்ரீம் என்பவரை…
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித் குமார், நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் பந்தயங்களில் அதீத ஆர்வம் கொண்டவர்…