8 மாதங்களில் 15 கிலோ எடை குறைத்து அசத்திய கிரேஸ் ஆண்டனி!

2016-ஆம் ஆண்டு வெளியான ‘ஹேப்பி வெட்டிங்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கிரேஸ் ஆண்டனி.தமிழில்2022 ஆம் ஆண்டு வெளியான ‘சதுரங்க வேட்டை – 2’ நடித்திருந்தார். அதன்பிறகு ராம் இயக்கத்தில் வெளியான ‘பறந்து போ’ படத்தில் நடித்திருந்தார். தனது உடல் எடையைக் குறைத்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். வெறும் 8 மாதங்களில் 15 கிலோ வரை எடை குறைத்துள்ள அவர், தற்போது முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.

‘கனியே’ திரைப்படத்துக்குப் பிறகு, கிரேஸ் தனது உடல் எடையைக் குறைக்கத் தீவிரமாக முயற்சி செய்தார். கடுமையான டயட், தினசரி உடற்பயிற்சி, யோகா மற்றும் நீண்ட நடைப் பயிற்சி ஆகியவை அவரது ரகசியமாக இருந்ததாகத் தெரிகிறது. சர்க்கரை, எண்ணெய் அதிகம் உ உணவுகளை முற்றிலும் தவிர்த்து, புரதச்சத்து நிறைந்த உணவுகளையே அதிகம் உட்கொண்டதாக அவர் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த உருமாற்றம் குறித்து கிரேஸ் சமூக வலைதளங்களில் பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. “இது எனக்கு புதிய தொடக்கம். உடல் நலனுக்காகவும், மனதுக்கு திருப்திக்காகவும் செய்தேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மிகவும் ஃபிட் ஆன தோற்றத்தில் இருக்கும் கிரேஸ் ஆண்டனி, புதிய திரைப்பட வாய்ப்புகளுக்காகவும் தயாராகி வருகிறார். ரசிகர்கள் அனைவரும் “Supergirl Grace” என்று பாராட்டி வருகின்றனர்!

Natarajan Karuppiah

Recent Posts

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றம்

சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…

4 நாட்கள் ago

MP DEVELOPERS நிறுவனத்தின் பிராண்ட் தூதராக சமந்தா ரூத் பிரபு நியமனம்

சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…

3 வாரங்கள் ago

நிஜ வாழ்விலும் ‘லெஜண்ட்’ தான்! வறுமையில் வாடிய பாவா லட்சுமணனுக்கு ஓடி வந்து உதவிய லெஜண்ட் சரவணன்!

தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…

3 மாதங்கள் ago

ஓடிடியில் ‘தி லெஜண்ட்’ சரவணனின் அதிரடி வேட்டை: பிரைம் வீடியோவில் ‘லீடர்’ படம் புதிய சாதனை!

தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,

3 மாதங்கள் ago

நடிகர் வாகை சந்திரசேகருக்கு மத்திய அரசின் உயரிய “யுவ புரஸ்கார்” தேசிய விருது அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…

3 மாதங்கள் ago

ஒரு பக்கம் மனதை நெகிழ வைத்த இசை… மறுபக்கம் மாடர்ன் மியூசிக் மேஜிக் – சாம் CS அசத்தல்!

இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.

3 மாதங்கள் ago