Download App

தன் சாதனையை தானே முறியடித்தவர்!

May 27, 2025 Published by anbuselvid8bbe9c60f

மலையேற்ற வழிகாட்டியான காமி ரீட்டா ஷெர்பா எவரெஸ்ட் சிகரத்தில் அதிகமான முறை ஏறி தான் படைத்த சாதனையை தானே முறியடித்தார்.
நேபாளத்தின் தாமி பகுதியை சார்ந்தவரான 55வ்யது காமி ரீட்டா செர்பா 1994 ஆம் ஆண்டு முதல் எவரஸ்டில் ஏறுபவர்களுக்கு வழிகாட்டியாக பணி புரிகிறார். மலையேறுவதும் சாகசம் செய்வதும் அவரது இலட்சியம் இல்லை என்றாலும் மலை ஏறுபவர்களுக்கு வழி காட்டியாய் சென்றே இவர் இந்த சாதனையை புரிந்துள்ளார்.

காமி ரீட்டா ஷெர்பா கடந்த ஆண்டுவரை 29 முறை எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்துள்ள நிலையில் இந்த ஆண்டு துவக்க முதல் இரண்டு முறை சிகரத்தில் ஏறி தன் சாகச பயணத்தின் எண்ணிக்கையில் இரண்டை உயர்த்தியுள்ளார், இந்திய ராணுவ வீரர்களின் ஒரு பிரிவினரின் மலையேற்ற முயற்சிக்கு துணையாக சென்ற இவர் நேற்று இரவு எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார். மலையேற்ற வீரர்களும் மீடியாவும் காமி ரீட்டா ஷெர்பாவை அவரது சாதனைகளுக்காக பாரட்டினாலும் ’இந்த சாதனை மகிழ்ச்சியாக இருந்தாலும் நான் இதை சாதனையாக செய்யவில்லை.. மலை ஏறுதல் எனக்கு தொழில் அவ்வளவுதான்..’என்று அடக்கத்தோடு சொல்கிறார்  காமி ரீட்டா ஷெர்பா.

More News

Trending Now

No trending articles in this category from the last 3 days.