திரைப்பட செய்திகள்

கோடை விடுமுறைக்கு சூர்யாவின் மெகா ட்ரீட்: ‘கருப்பு’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சூர்யா ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘கருப்பு’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் இன்று அறிவித்துள்ளனர். ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் இந்தப் படம், வரும் மே 14, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி தனது சமூக வலைதளப் பக்கத்தில், “#Karuppu – 14-05-2026. Blockbuster summer begins !!!” என பதிவிட்டு இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே ஏப்ரல் 10-ம் தேதி படம் வெளியாகும் என பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்த பாலாஜி, தற்போது கோடை விடுமுறையை குறிவைத்து தேதியை அறிவித்துள்ளார்.

சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யாவும், த்ரிஷாவும் இணைந்து நடிப்பதால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.இந்தப் படத்தில் சூர்யா ‘சரவணன்’ (அவரது இயற்பெயர்) என்ற பெயருடைய வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

‘ஜெய் பீம்’, ‘விக்ரம்’ போன்ற படங்களுக்குப் பிறகு சூர்யாவின் 45-வது படமாக இது உருவாகியுள்ளது. ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, சாய் அபியங்கர் இசையமைத்துள்ளார்.யோகி பாபு, நட்டி சுப்பிரமணியம், ஸ்வாசிகா, இந்த்ரன்ஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘கருப்பு’ திரைப்படம் மே மாதம் வெளியாகவுள்ள நிலையில், சூர்யாவின் அடுத்த படமான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ (வெங்கி அட்லூரி இயக்கம்) ஜூலை மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஒரே மாத இடைவெளியில் சூர்யாவின் இரண்டு படங்களை திரையில் காண ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Natarajan Karuppiah

Share
Published by
Natarajan Karuppiah

Recent Posts

16 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த ‘SMS’ கூட்டணி: “ஜாலியா இருந்த ஒருத்தன்” படப்பிடிப்பு நிறைவு!

தமிழ் சினிமாவில் 'சிவா மனசுல சக்தி' (SMS) என்ற பிளாக்பஸ்டர் படத்தின் மூலம் இளைஞர்களின் மனதைக் கவர்ந்த நடிகர் ஜீவா…

19 மணத்தியாலங்கள் ago

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி – சாய் பல்லவி! – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

இயக்குநர் மணிரத்னம் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தில், முதல்முறையாக விஜய் சேதுபதி மற்றும் சாய்…

19 மணத்தியாலங்கள் ago

கமல்ஹாசன் அவர்களுக்கு தெலுங்கானா அரசின் உயரிய விருதான ‘பைடி ஜெய்ராஜ்’ விருது வழங்கி கெளரவம்!

‘தெலுங்கான கட்டர் திரைப்பட விருதுகள் 2025’ விழா ஹைதராபாத்தில் 19-03-2026 அன்று நடைபெற்றது.

2 நாட்கள் ago

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ‘கேம் பிளே’ பட ஃபர்ஸ்ட் லுக்

காளிதாஸ் (2019) படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ் (Incredible Productions) தனது அடுத்த தயாரிப்பாக உருவாக்கி வரும் சஸ்பென்ஸ்…

2 நாட்கள் ago

ஏகே 64: மீண்டும் இணையும் ‘குட் பேட் அக்லி’ கூட்டணி! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அஜித் தரப்பு

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித்குமார், தற்போது 'விடாமுயற்சி' மற்றும் 'குட் பேட் அக்லி' ஆகிய திரைப்படங்களில் பிஸியாக…

3 நாட்கள் ago

ZHEN STUDIOS பெருமையுடன் வழங்கும் நீ Forever பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

ZHEN STUDIOS தயாரிப்பில், இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து இயக்குநர் அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின்…

3 நாட்கள் ago