Download App

ஜெயிலர் 2 அப்டேட்: ரஜினியுடன் கவுரவ வேடத்தில் விஜய் சேதுபதி உறுதி – டிசம்பர் 12-ல் டீஸர்!

கார்த்திகை 27, 2025 Published by anbuselvid8bbe9c60f

VJS

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ படத்தில் மக்கள் நடிகர் விஜய் சேதுபதி கவுரவ கதாபாத்திரத்தில் நடித்திருப்பது தற்போது உறுதியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’-இன் மிக முக்கியமான காட்சிகள் கோவாவில் படமாக்கப்பட்டன. அந்த ஷெட்யூலில் ரஜினிகாந்துடன் இணைந்து விஜய் சேதுபதியும் நடித்திருக்கிறார். சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும், நெல்சன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையை ஒரு நிகழ்ச்சியில் வெளிப்படையாகச் சொல்லியிருந்தார் விஜய் சேதுபதி. அந்த விருப்பம் இப்போது நிறைவேறியுள்ளது.

கடந்த 2019-ல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘பேட்ட’ படத்துக்குப் பிறகு ரஜினி – விஜய் சேதுபதி காம்போ மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் ஆக அமைந்துள்ளது.

அனிருத் இசையமைக்கும் இப்படம் 2026 ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரம்யா கிருஷ்ணன், எஸ்.ஜே.சூர்யா, மோகன்லால் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மிக முக்கிய தகவல்: ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12-ம் தேதி ‘ஜெயிலர் 2’ படத்தின் அதிகாரப்பூர்வ டீஸர் வெளியாகும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் பாகம் செய்த வசூல் சாதனையைத் தாண்டுமா ‘ஜெயிலர் 2’? விஜய் சேதுபதியின் என்ட்ரியுடன் இன்னும் பல மடங்கு உச்சத்திற்கு எகிறுமா எதிர்பார்ப்பு? ரசிகர்கள் கவுண்டவுனை ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டனர்!

Trending Now

No trending articles in this category from the last 3 days.