உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’தக்லைஃப்’ திரைப்படம், நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், “பேச வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது; அது ’தக்லைஃப்’ பற்றியது அல்ல, அதை பற்றி பிறகு பேசுவோம்,” என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் இந்த பேட்டியில் மேலும் கூறியதாவது:
’தக்லைஃப்’ படத்தில் பணிபுரிந்த அனைவருமே ஏற்கனவே நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு வந்தவர்கள் என்றும், “படை வீரர்கள் நிறைந்த படை இது,” என்றும் ’தக்லைஃப்’ படக்குழுவினர் குறித்து தெரிவித்தார்.
“இந்த படத்தில் நிறைய தொழில்நுட்ப கலைஞர்கள் பணி புரிந்திருக்கிறார்கள். மணிரத்னம் அவர்களுடன் பணி புரிந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது,” என்றும் கமல்ஹாசன் கூறினார்.
மேலும், “எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். ‘உயிரே உறவே தமிழே’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை, இப்போது முழுமையாக உணர்கிறேன்,” என்றும் தெரிவித்தார்.
அதன் பின்னர், “பேச வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால், அது ’தக்லைஃப்’ பற்றியது அல்ல. அதனைப் பற்றி பிறகு பேசுவோம். அதற்கான நேரத்தை ஒதுக்கி தருவது, ஒரு தமிழனாக என்னுடைய கடமை,” என்று அவர் கூறினார்.
எனவே, ’தக்லைஃப்’ திரைப்பட ரிலீஸுக்கு பிறகு அவர் விரிவாக சில முக்கிய விஷயங்களைப் பற்றி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென் கொரியாவின் தனித்துவமான கதைக் கருவை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், தமிழ் ஒரிஜினல்ஸில் முதன்முறையாக ஒரு கொரிய வெப்டூன்…
Bigg Boss Tamil வீட்டில் படுக்கையறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த காலணிகள் தொடர்பாக ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு, TTF வாசன்…
Bigg Boss Tamil Season 10 நிகழ்ச்சியில், சிறப்பு நாமினேஷன் டாஸ்க்கைத் தொடர்ந்து லட்சுமி பிரியா Bigg Boss வீட்டிலிருந்து…
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், கடந்த வாரம் தனது கருத்துகள் தொடர்பாக எழுந்து வரும்…
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் நடைபெற்ற டாஸ்க் பரபரப்பான கட்டத்தை எட்டுகிறது. டாஸ்க்கின் போது லட்சுமி பிரியா,…
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…