Download App

மாஸ் நடிகரிடம் லோகேஷ் கதை சொல்லி தெறிக்கவிட்டார்! கூட்டணி உறுதியானால் தீப்பொறி தான்!

கார்த்திகை 28, 2025 Published by anbuselvid8bbe9c60f

lokesh

தமிழ் சினிமாவின் முன்னணி இளம் இயக்குனர்களில் ஒருவராக உருவெடுத்துள்ள லோகேஷ் கனகராஜ், தற்போது பான்-இந்திய அளவில் கவனம் பெறும் இயக்குனராக மாறியுள்ளார். விக்ரம், லியோ போன்ற பிளாக்பஸ்டர் படங்களுக்குப் பிறகு, அடுத்ததாக கார்த்தி நடிக்கும் கைதி 2 படப்பிடிப்பு பணிகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கிவிட்டார் என்கிற செய்தி ஏற்கனவே ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில், இப்போது ஒரு புதிய “மாஸ்” தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ், தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுனை நேரில் சந்தித்து ஒரு புதிய கதையைக் கூறியுள்ளாராம்! புஷ்பா தொடரின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இந்திய அளவில் “பான்-இந்தியன் ஹீரோ” என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ள அல்லு அர்ஜுனிடம், LCU பிரபஞ்சத்தை உருவாக்கிய இயக்குனர் கதை சொன்னது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது அல்லு அர்ஜுன், இயக்குனர் அட்லீயுடன் இணைந்து ஒரு பிரம்மாண்ட படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், லோகேஷின் கதையை அல்லு அர்ஜுன் ஒப்புக் கொள்வாரா? இந்த புதிய கூட்டணி உருவாகுமா? என்பது தான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.

lokesh1

லோகேஷ் கனகராஜின் ஸ்டைலான ஆக்‌ஷன் திரைக்கதை + அல்லு அர்ஜுனின் மாஸ் எனர்ஜி = இது நடந்தால் திரையரங்குகள் தாங்காது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

பொறுத்திருந்து பார்ப்போம்… இந்த பான்-இந்திய காம்பினேஷன் உறுதியானால் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் ஒன்றாக கொண்டாட்டம் தான்!