Download App

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி டிசம்பர் 18-ல் களமிறங்குகிறது!

கார்த்திகை 19, 2025 Published by anbuselvid8bbe9c60f

ik

தமிழ் சினிமாவின் போட்டி நிறைந்த ரிலீஸ் அட்டவணையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் எடுத்திருக்கும் துணிச்சலான முடிவு தற்போது கோலிவுட் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கலகலப்பு காதல் காமெடி படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) டிசம்பர் 18-ம் தேதி உறுதியாக திரையரங்குகளில் வெளியாகிறது என தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் அறிவித்திருக்கிறார்.

முதலில் இப்படம் கடந்த தீபாவளிக்கு (அக்டோபர் 17) ரிலீசாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பிரதீப் ரங்கநாதனின் மற்றொரு படமான ‘டியூட்’ அதே தேதியில் மோதியதால், ரசிகர்கள் பிரிந்து போகக் கூடாது என LIK தயாரிப்பு குழு இரு மாதங்கள் பிற்போட்டது.

இந்த தாமதத்தால் OTT மற்றும் சாட்டிலைட் உரிமைகள் இன்னும் விற்பனையாகாமல் இருப்பதால் நிதி நெருக்கடி பற்றிய வதந்திகள் பரவின.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அதிரடியாக முடிவெடுத்திருக்கிறார்: “தியேட்டர் ரிலீஸ் முடிந்த பிறகே OTT மற்றும் சாட்டிலைட் உரிமைகளை ஏலம் விடுவோம். முதலில் பெரிய திரையில் படத்தின் மேஜிக் பார்க்கட்டும் ரசிகர்கள்… அதன் பிறகே ஸ்ட்ரீமிங் நிறுவனங்களே தானாக வந்து கேட்பார்கள்!” என்று நம்பிக்கையுடன் கூறியிருக்கிறார்.

k1

‘கோமாளி’, ‘லவ் டுடே’ , ‘டியூட்’ போன்ற ஹிட்களை கொடுத்த பிரதீப் ரங்கநாதனின் அடுத்த ஜாலி என்டர்டெய்னர் என எதிர்பார்க்கப்படும் இப்படம், நவீன உறவுகளை இன்சூரன்ஸ் கான்செப்ட்டுடன் கலந்து சுவாரஸ்யமாக சித்தரிப்பதாக சொல்லப்படுகிறது.