சூடான தேநீரால் பாதிப்படைந்த வாடிக்கையாளருக்கு 5 கோடி டாலர் இழப்பீடு – ஸ்டார்பக்ஸுக்கு நீதிமன்றம் உத்தரவு!

ஒரு டெலிவரி டிரைவருக்கு ஸ்டார்பக்ஸில் வாங்கிய சூடான தேநீர்  கொட்டி தோல் ஒட்டு அறுவை சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு உடல் வெந்து போனதால், அவருக்கு 5 கோடி டாலர் (சுமார் 427 கோடி ரூபாய்) இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கலிபோர்னியா ட்ரைவ் த்ரூவில் உள்ள ஒரு ஸ்டார்பக்ஸ் கடையில் வண்டிலிருந்தபடியே சூடான தேரீரை வாங்கிய மைக்கேல் கார்சியா என்ற  டெலிவரி ட்ரைவரின் மடியில் தேநீர் கொட்டியதால், அவரது பிறப்புறுப்பு, இடுப்பு மற்றும் தொடைகளின் உட்புறத்தில் மூன்றாம் நிலை தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும்,  வாழ்க்கையையே மாற்றும் அளவுக்கு அவர் உடல் பாதிப்படைந்துள்ளதாகவும்  அவரது சட்டக் குழு தெரிவித்துள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அந்த கடையின் பணிப்பெண் கொதிக்கும் தேநீர் கோப்பைகளை வழியே நீட்டிய போது, பாதுகாப்பு முறைகளை பின்பற்றாததால், கோப்பைகள் சரிந்து தனக்கு காயமேற்பட்டதாக மைக்கேல் கார்சியா நீதிமன்றத்தை அணுகினார். போஸ்ட்மேட்ஸ் டெலிவரி ட்ரைவராக பணிபுரிந்த அவருக்கு 2020ல் நடந்த இந்த சம்பவத்தினால் அவர் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டதாகக் கூறிய அவர் தரப்பு வழக்கறிஞர், அவருக்கு  சரியான நீதி வழங்கப் பட்டிருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.
அவரது நிலைக்காக  வருந்துவதாகக் கூறிய ஸ்டார்பக்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தீர்மானித்துள்ளது. “இந்த சம்பவத்தில் நாங்கள் மட்டுமே குற்றவாளி என்பதை எங்களால் ஏற்க முடியாது. விதிக்கப் பட்ட இழப்பீட்டுத் தொகையும் மிக அதிகமாக உள்ளது” என்று கூறிய நிறுவனம், தாங்கள் சூடானப் பொருட்களை விநியோகிக்கும் போது மிக பாதுகாப்பான முறைகளையே கையாள்வதாகவும் தெரிவித்தது.   

anbuselvid8bbe9c60f

Recent Posts

காதல், குடும்ப உறவுகள் மற்றும் நகைச்சுவை கலந்த ‘லவ் ஆல்வேஸ்’ தொடரின் சுவாரசியமான டீசரை வெளியிட்டது ஜியோஹாட்ஸ்டார்

தென் கொரியாவின் தனித்துவமான கதைக் கருவை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், தமிழ் ஒரிஜினல்ஸில் முதன்முறையாக ஒரு கொரிய வெப்டூன்…

4 வாரங்கள் ago

பதற்றம் உச்சத்தை எட்டியது! TTF வாசன் மற்றும் ஜேசனின் வாக்குவாதத்தால் பரபரப்பான Bigg Boss Tamil வீடு

Bigg Boss Tamil வீட்டில் படுக்கையறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த காலணிகள் தொடர்பாக ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு, TTF வாசன்…

4 வாரங்கள் ago

கண்ணீர், கடினமான முடிவுகள் மற்றும் ஒரு விடைபெறல்: Bigg Boss Tamil வீட்டிலிருந்து லட்சுமி பிரியா வெளியேறினார்

Bigg Boss Tamil Season 10 நிகழ்ச்சியில், சிறப்பு நாமினேஷன் டாஸ்க்கைத் தொடர்ந்து லட்சுமி பிரியா Bigg Boss வீட்டிலிருந்து…

1 மாதம் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விஜய் சேதுபதி – “சூழல் புரியும் என நினைத்தேன்…”

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், கடந்த வாரம் தனது கருத்துகள் தொடர்பாக எழுந்து வரும்…

1 மாதம் ago

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: டாஸ்க்கில் வெடித்த பரபரப்பு – லட்சுமி பிரியா தள்ளியதில் காயமடைந்த ஆனந்தி!

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் நடைபெற்ற டாஸ்க் பரபரப்பான கட்டத்தை எட்டுகிறது. டாஸ்க்கின் போது லட்சுமி பிரியா,…

2 மாதங்கள் ago

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றம்

சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…

2 மாதங்கள் ago