மாரி செல்வராஜ் தலைசிறந்த இயக்குநர் – தினேஷ் கார்த்திக் உருக்கமான பாராட்டு!
கார்த்திகை 28, 2025 Published by anbuselvid8bbe9c60f

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான ‘பைசன் – காளமாடன்’ திரைப்படத்தை பார்த்து வியப்பும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் திரையரங்குகளிலும் ஓடிடியிலும் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றுள்ளது.
தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் தினேஷ் கார்த்திக் வெளியிட்ட பதிவில்,
“படம் மிகச் சிறப்பாக இருந்தது. மாரி செல்வராஜ் ஒரு தலைசிறந்த திரைப்பட இயக்குநர். அவரது படைப்புகள் அழுத்தமானதாகவும், ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துபவையாகவும் உள்ளன.
துருவ் விக்ரம் இந்தப் படத்தில் மிகவும் யதார்த்தமாக நடித்துள்ளார்; அதற்காக அவர் மிகுந்த கடின உழைப்பைச் செலுத்தியிருப்பார்.
துணை கதாபாத்திரங்களில் நடித்த அனைவரும் மிகச் சிறப்பாக தங்கள் பங்கை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அனைவருக்கும் எனது பாராட்டுகளும், இனி வரும் படைப்புகளுக்கு மேலும் பல வெற்றிகளும் கிடைக்க வாழ்த்துகிறேன்” என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
துருவ் விக்ரமுடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால், அமீர், மதன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்த ‘பைசன் – காளமாடன்’ திரைப்படம் தற்போது தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்புகளில் ஒன்றாகப் பேசப்பட்டு வருகிறது.
கிரிக்கெட் உலகின் பிரபலமான முகம் ஒன்று தமிழ் சினிமாவுக்கு இப்படி திறந்த மனதுடன் பாராட்டு தெரிவித்திருப்பது, படக்குழுவினருக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.















