துபாயில் நடைபெற்ற உலகப் பிரசித்தி பெற்ற Dubai Watch Week நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் நடிகர் தனுஷ். உலகின் மிகப் பிரம்மாண்டமான லக்சரி வாட்ச் பிராண்டுகளும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வாட்ச்களும் காட்சிப்படுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தனுஷிடம் ஒரு எளிய கேள்வி கேட்கப்பட்டது.
“உங்களுக்கு முதல் முறையாக காதல் வந்த வாட்ச் எது? அதைப் பற்றி சொல்ல முடியுமா?” என்று தொகுப்பாளர் கேட்டார்.
அதற்கு பதிலளித்த தனுஷ், லட்சக்கணக்கான ரூபாய் விலை கொண்ட வாட்ச்களுக்கு நடுவே நெகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் பேசத் தொடங்கினார்:
“எனக்கு இப்போ வரைக்கும் மிகவும் பிடித்த வாட்ச் என்றால்… என் அம்மா ஸ்கூல் படிக்கும்போது வாங்கிக் கொடுத்த ஒரு பிளாஸ்டிக் வாட்ச் தான். அதற்கு பிராண்ட் பெயர் எதுவும் கிடையாது. டாலரை விட குறைவான விலை தான்.
அதுல ஒரு சின்ன லைட் இருக்கும். பேட்டரி ரொம்ப சின்னதா இருக்கும். பேட்டரி முடிஞ்சா டைம் காட்டாது. ஆனாலும் நானும் என் அக்காக்களும் ஊதா, மஞ்சள், பச்சைனு மாறி மாறி கட்டிக்குவோம்.
பேட்டரி முழுக்க முழுக்க டெட் ஆனாலும் கூட, டைம் தெரியாமல் இருந்தாலும் அந்த வாட்சை கையில் கட்டிக்கிட்டே தான் ஸ்கூலுக்கு போவேன். அந்த அளவுக்கு அதை விரும்பினேன்.
இன்னும் அந்த வாட்சை வீட்டுல பத்திரமா வெச்சிருக்கேன். எனக்கு இப்போ வரைக்கும் மறக்க முடியாத, மிகவும் பிடித்த வாட்ச் என்றால்… அது தான்!”
தனுஷின் இந்த உருக்கமான பதில் அந்த மேடையில் இருந்த அனைவரையும் நெகிழ வைத்தது. கோடிகளை செலவழித்து வாங்கும் வாட்ச்களை விட, அம்மாவின் அன்போடு வந்த சின்னஞ்சிறு பிளாஸ்டிக் வாட்சுக்கு தான் மதிப்பு அதிகம் என்பதை தனுஷ் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.
எளிய பின்னணியில் இருந்து உலக அளவில் பிரபலமான நடிகராக உயர்ந்த தனுஷின் இந்தப் பேச்சு, ரசிகர்களிடையே பெரும் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…
சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…
தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…
தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.