40 லட்ச ரூபாய் கேட்ட ஆர்த்தி.. ஒரு பைசா கூட வேண்டாம் என கூறிய சமந்தா.. நெட்டிசன்கள் ஒப்பீடு..!

நடிகர் ரவி மோகனை திருமணம் செய்த ஆர்த்தி ரவி, தனக்கு மாதம் 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ள நிலையில், தனது கணவர் நாக சைதன்யாவை பிரியும் போது “தனக்கு ஒரு பைசா கூட ஜீவனாம்சம் தேவையில்லை” என நடிகை சமந்தா கூறியது, சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் ஒப்பீடு செய்யப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி விவாகரத்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆர்த்தி ரவி தனது மனுவில் மாதம் 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் தேவையென தெரிவித்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த விசாரணை முடிந்த சில நிமிடங்களில், ரவி மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், போன் பேசும் போல் இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, அதில் “News incoming” என்று குறிப்பிட்டுள்ளார். இது ஆர்த்தி ரவியை திட்டமிட்டவாறு கேலி செய்கிறார் போல் உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், சிலர் “News incoming”ஆ  அல்லது “New income-ing”ஆ என்றும் கூறி, கெனிஷா குறித்து ரவி மோகனையே கேலி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கும் நெட்டிசன்கள், சமந்தா மற்றும் ஆர்த்தி ரவியை ஒப்பிட்டு கூறியபோது, ‘“நடிகை சமந்தா, தனது கணவரை பிரியும் போது ஒரு பைசா கூட ஜீவனாம்சம் வேண்டாம் என்று சொன்னார். நாகார்ஜுனா ‘பிளாங்க் செக்கை கொடுக்க தயார், எத்தனை கோடி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்’ என்ற போதும், அவர் அதை  வாங்க மறுத்தார். அதுதான் உண்மையான நற்பண்பு. கணவன்-மனைவி பிரிவில் பணம் முக்கிய பங்கு வகிக்க கூடாது. ஆனால் ஆர்த்தி ரவி மாதம் 40 லட்சம் கேட்பது, பணம் தான் முக்கியம் என அவரின் மனநிலையை காட்டுகிறது,” என்று தெரிவித்து வருகின்றனர்.

எனவே, இந்த ஒப்பீடு குறித்து  நீங்கள் இந்த விவகாரத்தில் என்ன நினைக்கிறீர்கள்? என்பதை கீழே கமெண்ட் பகுதியில் உங்கள் கருத்தை பகிருங்கள்.

Natarajan Karuppiah

Recent Posts

நிஜ வாழ்விலும் ‘லெஜண்ட்’ தான்! வறுமையில் வாடிய பாவா லட்சுமணனுக்கு ஓடி வந்து உதவிய லெஜண்ட் சரவணன்!

தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…

6 நாட்கள் ago

ஓடிடியில் ‘தி லெஜண்ட்’ சரவணனின் அதிரடி வேட்டை: பிரைம் வீடியோவில் ‘லீடர்’ படம் புதிய சாதனை!

தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,

2 வாரங்கள் ago

நடிகர் வாகை சந்திரசேகருக்கு மத்திய அரசின் உயரிய “யுவ புரஸ்கார்” தேசிய விருது அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…

2 வாரங்கள் ago

ஒரு பக்கம் மனதை நெகிழ வைத்த இசை… மறுபக்கம் மாடர்ன் மியூசிக் மேஜிக் – சாம் CS அசத்தல்!

இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.

2 வாரங்கள் ago

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு சுபாஷ் என்ற பெயரில் பிரம்மாண்டமான திரைப்படத்தை ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்தயாரிக்கிறது

இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை, பாரம்பரியம் மற்றும் சாதனைகளை…

2 வாரங்கள் ago

என் தாய் தந்தைக்குக்கூட இவ்வளவு கடமைப்பட்டதில்லை! – மிஷ்கின்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா (84), கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில்…

2 வாரங்கள் ago