சிறுகதை தொகுப்புக்காக புக்கர் பரிசு பெறும் இந்திய பெண் எழுத்தாளர் !

இந்திய பெண் எழுத்தாளர் பானு முஷ்தக் மற்றும் மொழிபெயர்ப்பாளர் தீபா பஸ்தி இருவரும்,  12 சிறுகதைகள் அடங்கிய ”இதய தீபம்” (ஹார்ட் லாம்ப்) என்ற சிறுகதைத் தொகுப்புக்கு  புக்கர் பரிசை வென்றுள்ளனர். 50 ஆயிரம் யூரோ பணப் பரிசு பெறும் இந்த சிறுகதைத் தொகுப்பு முதல்முறையாக கன்னடத்தை உலக அரங்கிற்குக் கொண்டு சென்றுள்ளது. 30 ஆண்டுகளுக்கும் அதிகமான காலகட்டத்தில் 77 வயதான வழக்கறிஞரும், புரட்சியாளருமான பானு முஷ்தக் எழுதிய  இந்த சிறுகதைகள் தென் இந்திய இஸ்லாமிய  பெண்களின் தினசரி வாழ்க்கையையும், போராட்டங்களையும்  சித்தரிப்பவையாக உள்ளன.
சிறுகதைத் தொகுப்புக்கு புக்கர் பரிசு வழங்கப்படுவது இது தான் முதல் முறை என்பது இதன் கூடுதல் சிறப்பு. 2016ல் சிறுகதைத் தொகுப்பாக மொழிபெயர்க்கப் பட்ட இந்த படைப்பு, மொழிபெயர்ப்பாளர் தீபா பஸ்தியை, புக்கர் பரிசு பெறும் முதல் இந்திய மொழிபெயர்ப்பாளராகவும், ஒன்பதாவது பெண் மொழிபெயர்ப்பாளராகவும் ஆக்கியுள்ளது. 2016க்குப் பின்,  முஸ்தக் இந்த பரிசைப் பெறும் ஆறாவது பெண் எழுத்தாளர் ஆவார்.
கன்னடத்தில் எழுதப்பட்ட இந்த கதைத் தொகுப்பு,  “யதார்த்தமான” ஆங்கிலத்தில்  மொழிபெயர்க்கப் பட்டதாக   நடுவர் மன்ற உறுப்பினர்கள் பாராட்டினர்.
”அழகிய, பரபரப்பான , உயிருட்டமுள்ள இந்த கன்னடத்துக் கதைகள் வேற்று மொழிகள் மற்றும் வட்டார மொழிகளின் அசாதாரணமான சமூக- அரசியல் செழுமையுடன் எழுதப் பட்டுள்ளன “ என பாராட்டிய நடுவர்கள்,” இது பெண்களின் வாழ்க்கை, அவர்களது இனப்பெருக்க உரிமைகள், பக்தி, ஜாதி, வலிமை, மற்றும் ஒடுக்குமுறைகளைப் பற்றியும் பேசுகின்றன” என்றனர்.
இறுதிச் சுற்றில் ஐந்து நூல்களை பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்ற இந்த கதைத் தொகுப்பை மொழிபெயர்த்த தீபா பஸ்தி, தென் இந்தியாவின் பன்மொழித் தன்மையை தமது மொழிபெயர்ப்புகளில் பாதுகாப்பதில் தீவிர முனைப்புடையவர்.
வழக்கறிஞர்- எழுத்தாளரான பானு முஷ்தக், தமது கதைகளைப் பற்றி கூறும் போது, “எல்லாமே பெண்களைப் பற்றியவை. _ மதம், சமூகம், மற்றும் அரசியல் ஆகியவை அவர்களிடம் எவ்வாறு முழுமையான கீழ்படிதலை எதிர்பார்க்கிறது, அவர்கள் கீழ்படியும் போது, எவ்வாறு  மனிதத் தன்மையற்ற கொடுமைக்கு ஆளாகி, வெறும் கீழ்நிலை பணியாளர்களாக மாற்றப்படுகிறார்கள் என்பதைப் பற்றியவை தாம்” என்றார்.
எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும் பணப்பரிசை பகிர்ந்து கொண்டனர். இருவருக்கும் தனித்தனியாக ட்ராஃபிக்களும் அளிக்கப் பட்டன.

anbuselvid8bbe9c60f

Recent Posts

நிஜ வாழ்விலும் ‘லெஜண்ட்’ தான்! வறுமையில் வாடிய பாவா லட்சுமணனுக்கு ஓடி வந்து உதவிய லெஜண்ட் சரவணன்!

தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…

6 நாட்கள் ago

ஓடிடியில் ‘தி லெஜண்ட்’ சரவணனின் அதிரடி வேட்டை: பிரைம் வீடியோவில் ‘லீடர்’ படம் புதிய சாதனை!

தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,

2 வாரங்கள் ago

நடிகர் வாகை சந்திரசேகருக்கு மத்திய அரசின் உயரிய “யுவ புரஸ்கார்” தேசிய விருது அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…

2 வாரங்கள் ago

ஒரு பக்கம் மனதை நெகிழ வைத்த இசை… மறுபக்கம் மாடர்ன் மியூசிக் மேஜிக் – சாம் CS அசத்தல்!

இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.

2 வாரங்கள் ago

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு சுபாஷ் என்ற பெயரில் பிரம்மாண்டமான திரைப்படத்தை ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்தயாரிக்கிறது

இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை, பாரம்பரியம் மற்றும் சாதனைகளை…

2 வாரங்கள் ago

என் தாய் தந்தைக்குக்கூட இவ்வளவு கடமைப்பட்டதில்லை! – மிஷ்கின்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா (84), கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில்…

2 வாரங்கள் ago