Vijay Antony Film Corporation சார்பில், ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும், அஜய் திஷான் நடிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில், ரொமான்ஸ் காமெடி ஜானரில், இளைஞர்களை கவரும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “பூக்கி”. இப்படம் காதலர் தினக் கொண்டாட்டமாக வரும் 2026 பிப்ரவரி 13 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
பட வெளியீட்டை முன்னிட்டு படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து படம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி பேசியதாவது..,
நீங்கள் இல்லாமல் நான் இல்லை. எப்போதும் எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த விழாவின் நாயகன் கணேஷ் சந்திரா. அவரை நான் முதலில் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தினேன் என்பதில் எனக்கு பெருமை. இன்று அவரை இயக்குநராக மீண்டும் அறிமுகப்படுத்துவது இன்னும் பெருமை. உங்கள் உழைப்பு திரையில் தெளிவாக தெரிகிறது. மீடியா, ரசிகர்கள் எல்லாரும் கண்டிப்பாக பாராட்டுவார்கள். மலையாள சினிமா போல தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்கும் முக்கியத்துவம் வர வேண்டும். அந்த வகையில் புதிய பரதி ஒரு முக்கியமான எழுத்தாளர். இந்த படத்துக்கு பிறகு அவர் பெரிய இடத்திற்கு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது. அஜய் – மிக நேர்மையான, உழைப்பாளி. முதலில் ஒரு நல்ல மனிதன். அதனால் தான் நல்ல நடிகனாகவும் பெரிய இடத்திற்கு வருவார். தனுஷா – மிகவும் புத்திசாலியான, திறமையான நடிகை. டயலாக் டெலிவரி, டப்பிங், நடிப்பு – எல்லாமே சிறப்பாக இருந்தது. இந்த படம் உங்களுக்கு நிறைய வாய்ப்புகளை கொண்டு வரும். இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்கள், தொழில்நுட்பக் குழு, எனக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பு குழு அனைவருக்கும் என் நன்றி. இந்த படம் பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியாகிறது. உங்கள் ஆதரவோடு இது பெரிய வெற்றியை பெறும் என்று நம்புகிறேன். இப்படத்தின் உரிமையை வாங்கிய Zee நிறுவனத்திற்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.
இவ்வளவு நாள் கேமராவுக்குப் பின்னாடி இருந்து மத்தவங்க சொல்ற ‘ஆக்ஷனை’ மட்டும் கேட்டுட்டு இருந்தேன். ஆனா இப்போ முதல் முறையா, ‘பூக்கி’ படத்தின் மூலமா கேமராவுக்கு முன்னாடி வந்து ‘ஆக்ஷன்-கட்’ சொல்ல ஆரம்பிச்சிருக்கேன்.
இந்த வாய்ப்பு தந்த விஜய் ஆண்டனி சாருக்கு என் மனமார்ந்த நன்றி. என் மீது அவர் வைத்த நம்பிக்கையை நான் கண்டிப்பாக காப்பாற்றியிருக்கிறேன். இந்த படத்தை வெறும் ஆறு மாதங்களில் முடித்திருக்கிறோம். இன்றைய சூழலில் ஒரு படத்தை விரைவாக முடித்து, வணிக ரீதியாகவும், வெளியீட்டிலும் ஒழுங்காக கொண்டு வருவது எளிதல்ல. Zee நிறுவனம் இப்படத்தை வாங்கி விட்டது. அதை சாத்தியமாக்கிய தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி சாருக்கு மிகப் பெரிய நன்றி. விஜய் ஆண்டனி சார் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. அவருடைய உழைப்புக்கு ஒரே விளக்கம் தான் “தொடர்ந்து முயற்சி செய். தவறாக இருந்தாலும் சரியாக வரும் வரை செய்” என்பார். இரவு, பகல் பாராமல் வேலை செய்யும் அந்த ஆற்றல் எங்களை எல்லோரையும் ஊக்கப்படுத்தியது. இந்த படத்தின் எழுத்தாளர் புதிய பரிதி, நாயகன் அஜய், நாயகி தனுஷா —இந்த மூன்று பேரும் இந்த படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு. இவர்களில்லாமல் இந்த படம் இப்படியாக உருவாகியிருக்காது. இயக்கக் குழு, இசை, எடிட்டிங், உடை வடிவமைப்பு, தயாரிப்பு குழு, அனைவரும் ஒரு குழுவாக அல்ல, ஒரு குடும்பமாக வேலை செய்தார்கள்.அதனால்தான் இந்த படம் இவ்வளவு வேகமாகவும் அழகாகவும் உருவானது. இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த அனைவருக்கும், இந்த நிகழ்வுக்கு வந்துள்ள உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் நன்றி.
நடிகர் அஜய் திஷான் பேசியதாவது..,
இந்த படம் எனக்கு ஒரு சாதாரண திரைப்படம் அல்ல. இது என் வாழ்க்கையில் கிடைத்த ஒரு பெரிய அனுபவம். நான் ஒருபோதும் நினைக்காத பல விஷயங்கள் இந்த படத்தின் மூலம் நடந்திருக்கிறது. கதையை முதலில் படித்தபோதே, இந்த படம் மிகுந்த கவனத்தோடு, ஆழமான எழுத்துடனும் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதைக் உணர்ந்தேன். உண்மை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த கதையே என்னை மிகவும் பாதித்தது. இயக்குநர் கணேஷ் சந்திரா சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள். அவருடன் வேலை செய்வது மிகுந்த ஊக்கமும் நிம்மதியும் தரும் அனுபவமாக இருந்தது. அவருடன் இன்னும் நிறையப்படங்கள் வேலை செய்ய ஆசைப்படுகிறேன். படத்தில் உடன் நடித்த அனைவரும் பெரும் ஒத்துழைப்பு தந்தார்கள். தனுஷா நல்ல தோழியாக மாறி விட்டார். இந்த படத்தின் குழு அனைவரும் ஒரு குழுவாக அல்ல, ஒரு குடும்பமாகவே இருந்தார்கள். அவர்களில்லாமல் இந்த படம் இவ்வளவு சீக்கிரமாகவும் ஒழுங்காகவும் முடிந்திருக்காது. உடை வடிவமைப்பாளர் மாளவிகா அவர்களுக்கும், நடன இயக்குநர் அவர்களுக்கும் என் சிறப்பு நன்றிகள். இந்த படம் எனக்கு ஒரு வேலை போல அல்ல; இன்னொரு வீட்டில் இருப்பது போலவே இருந்தது. அந்த அளவுக்கு அன்பும், நம்பிக்கையும் இந்த குழுவில் இருந்தது. என்னை ஆரம்பத்திலிருந்தே நம்பி ஆதரித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த படம் உங்களுக்கும் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
நடிகை லக்ஷ்மி மஞ்சு பேசியதாவது…,
இந்த படம் உண்மையிலேயே ரொம்ப ஸ்பெஷல். இந்த அனுபவத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இயக்குநர் மிகப்பெரிய திறமைசாலி. மிகவும் தனித்துவமானவர். நடிகர்களை எப்படி கையாள வேண்டும் என்று அவருக்கு தெரியும். அவரை கண்டுபிடித்தற்காக விஜய் ஆண்டனி சாருக்கு நன்றி. அஜய் ஒரு உதவி இயக்குநர் போல தான் இருந்தார். அவர் திறமை பார்த்து ஆச்சரியாமாக இருந்தது. விஜய் ஆண்டனி சார் பாடலில் நான் நடிக்கவில்லை என்பது எனக்கு வருத்தம். ஆனால் இந்தப்படத்தில் நானும் இருப்பது பெருமை. தமிழில் எப்போது நடித்தாலும் எனக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கிறது. எல்லோருக்கும் நன்றி. படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகை தனுஷா பேசியதாவது..,
முதலில், இவ்வளவு பெரிய படத்தில் என்னை நம்பி, எனக்கு வாய்ப்பு தந்த விஜய் ஆண்டனி சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள். நாயகியாக இது எனது முதல் திரைப்படம். அதுவும் இவ்வளவு பெரிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகப் பெரிய ஆசீர்வாதம். நான் உண்மையிலேயே மிகுந்த அதிர்ஷ்டசாலி. இயக்குநர் கணேஷ் சந்திரா சார் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. ஒரு கலைஞருக்கு மிகவும் முக்கியமானது, சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் நடிக்க முடிவதுதான். அந்த நிம்மதியை முழுமையாக எனக்கு அளித்தவர் கணேஷ் சந்திரா சாரும், இந்த முழு குழுவும் தான். எத்தனை சிறிய காட்சிகளுக்காக எத்தனை முறை எடுத்தாலும், ஒரு நொடி கூட முகம் சுளிக்காமல் எப்போதும் ஊக்கம் அளித்தார்கள். அதற்காக என் மனமார்ந்த நன்றிகள். என்னுடன் நடித்த அஜய் — உங்களுக்கும் என் நன்றி. மிகவும் கனிவாகவும், சுதந்திரமாகவும் நடந்துகொண்டதால் இப்படத்தில் நடிக்க எனக்கு மிகவும் எளிதாக இருந்தது. அஷ்வின், லக்ஷ்மி அம்மா — அனைவருக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள். இந்த திரைப்படத்தை பிப்ரவரி 13 அன்று, உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் திரையரங்கில் கண்டிப்பாக பார்த்து ஆதரிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் சசி பேசியதாவது..,
எல்லாருக்கும் வணக்கம். இந்த படத்துல இருக்கிற பாடல் காட்சிகளையும், சீன்ஸையும் நீங்க எல்லாரும் பார்த்திருப்பீங்க. உங்கள் எல்லாருக்கும் இருக்கும் எதிர்பார்ப்பை விட இரண்டு மடங்கு அதிகமான எதிர்பார்ப்பு எனக்கு இருக்கிறது. அதுக்குக் காரணம் கணேஷ்சந்திரா. அவர் ஒரு சினிமாட்டோகிராபர் மட்டுமல்ல, ஒரு இயக்குநரும் கூட. நான் விஜய் ஆண்டனி, அஜய் வைத்து கிராமத்து பின்னணியில் ஒரு படம் செய்து வருகிறேன். அந்த படத்துல எல்லாருமே ஃபுல்லா டேன் லுக். விஜய் ஆண்டனிக்கு ஒரு விவசாயி கேரக்டர். ஆனா இங்க இந்த படத்துல பார்த்தா… எல்லாமே கலர் கலரா, ஃப்ரெஷ்ஷா இருக்கிறது. அதை பார்த்ததும் ரொம்ப பெரிய சர்ப்ரைஸாக இருந்தது. அஜய் என் படத்திலேயும், இந்த படத்திலேயும் இரண்டு வெவ்வேறு மாதிரியான கேர்கடர்களை மிக அழகாக கையாண்டிருக்கிறார். உண்மையிலேயே நல்ல திறமைசாலி. இப்படத்தில் ரொம்ப சென்சிபிளான, எமோஷனல் லவ் ஸ்டோரி இருக்கும் அப்படிங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கணேஷ்சந்திரா பற்றி நான் கேள்விப்பட்டிருக்கேன். அவர் எடுக்குற கதை, சொல்லுற விதம் எப்போதுமே ஒரு உணர்வோட இருக்கும். அதோட விஜய் ஆண்ட்னியின் பாடல்கள்… சோகமான இடத்துல வர வேண்டிய சாங்ஸ்கூட ஒரு தனி வைபோட, அவருடைய ஸ்டைல்ல ரொம்ப அழகா போட்டிருக்கார். இந்த பிப்ரவரி 13, ஒரு நல்ல கதையோட, ஒரு நல்ல படம் திரைக்கு வரப்போறதுன்னு நம்பிக்கையோட முடிக்கிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நடிகர் அஷ்வின் ராம் பேசியதாவது..,
நான் தியேட்டர் குரூப்பில் ஏழு வருடமாக இருந்தேன், பூக்கி பட வாய்ப்பு தந்த என் இயக்குநர் கணேஷ் சந்திரா சார், விஜய் ஆண்டனி சாருக்கு நன்றி. இயக்குநர் ரொம்பவே கூல், அவர் ஒரே நேரத்தில் கேமரா, டைரக்ஷன் இரண்டையும் செய்துள்ளார். இந்த டீம் ரொம்பவே இனிமையாக இருந்தார்கள். எல்லோருக்கும் என் நன்றிகள். விஜய் ஆண்டனி சார் பாடல்களுக்கு தீவிர ரசிகன், அவர் தயாரிக்கும் படத்தில் நடிப்பது பெரிய மகிழ்ச்சி. படக்குழு அனைவருக்கும் என் நன்றிகள். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகர் சத்யா பேசியதாவது..,
பிக்பாஸ் அங்கீகாரத்தை விட, இப்படத்தை பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன். இயக்குநர் கணேஷ் சார், விஜய் ஆண்டனி சாருக்கு நன்றி. இப்படம் மிகச்சிறப்பான அனுபவம். அஜய் கற்பூரம் மாதிரி, எந்த காட்சியையும் அட்டகாசமாக நடிப்பார். ஹீரோயின் நன்றாக நடித்துள்ளார். பிப்ரவரி 13 ஆம் தேதி எல்லோரும் திரையரங்கில் படம் பாருங்கள் நன்றி.
விஜய் ஆண்டனி நடிப்பில் பெரு வெற்றி பெற்ற சலீம் படத்தில் அறிமுமாகி, ஜெயில், காரி, Miss Match தெலுங்குப்படம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா இப்படத்தை, ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார்.
இன்றைய 2K தலைமுறை காதலுக்கு பெற்றோர்கள் குறுக்கே நிற்பதில்லை, காதலர்களே தான் பிரச்சனையாக இருக்கிறார்கள். அப்படியான 2K தலைமுறை காதலர்களின் உலகை மையப்படுத்தி, ஒரு இளைஞன் சந்திக்கும் பிரேக்கப் அதைத்தாண்டி அவன் எப்படி வெளியே வருகிறான் என்பதை, பரபரப்பான திரைக்கதையில், கலக்கலான காமெடியுடன் சொல்லும், ஒரு அழகான ரோம் காம் திரைப்படமாக ‘பூக்கி’ உருவாகியுள்ளது.
தன் இசை ரசிகர்கள் நீண்ட காலமாக முன்வைத்து வந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு விஜய் ஆண்டனி இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மார்கன் படத்தில் தனது நடிப்பால் பெரும் பாராட்டுக்களைக் குவித்த அஜய் திஷான் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக தனுஷா நடித்துள்ளார். இவர்களுடன் லக்ஷ்மி மஞ்சு, பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிக்பாஸ் சத்யா, MJ ஶ்ரீராம், அஸ்வின் ராம், ஷியாரா ஷார்மி, பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படம் காதலர் தினக் கொண்டாட்டமாக வரும் 2026 பிப்ரவரி 13 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
'அமரன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம்…
திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் நடிகை சுரேகா வாணி
JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான…
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மிருணாள் தாகூர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி காட்டுத்தீயாய்…
திரையுலகில் ஒரு இயக்குநராகவும், தொழில்நுட்பக் கலைஞராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
இந்திய இசையுலகின் அடையாளமாகத் திகழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க நீண்ட காலமாகப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு…