ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘தேரே இஸ்க் மெயின்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடித்துள்ளார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. ராஞ்சனா, அட்ராங்கி ரே படங்களைத் தொடர்ந்து இந்த மூன்றாவது கூட்டணியில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, கதாநாயகியாக கிர்த்தி சனோன் நடிக்கிறார். முழு ஹிந்தி படமாக உருவாகியுள்ள இது, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வரும் நவம்பர் 28 அன்று திரைக்கு வருகிறது.
ஏற்கனவே வெளியான இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தனுஷ்-பிரபுதேவா முதல் முறையாக இணைந்து நடித்திருப்பது படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பனாரஸ் பின்னணியில் அமைந்த இந்த தீவிர காதல் கதை, காதல், தியாகம், மாற்றம் ஆகிய தீம்களை மையப்படுத்தியுள்ளது. 2 மணி 25 நிமிடங்கள் நீளமுடைய இப்படம் தனுஷின் ஹிந்தி சினிமாவில் மற்றொரு மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் மற்றும் மலையாள ZEE5 இன்று தங்களது அடுத்த ஒரிஜினல் சீரிஸான ‘காக்கி சர்கஸ்’ ஐ அறிவித்துள்ளது.
சமீபத்தில் தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட பார்த்திபன், தான் "சாதி இல்லை, மதம் இல்லை" (No Caste,…
மறைந்தாலும் தனது குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் 'பாடும் நிலா' எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு, கேரள மாநிலம்…
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் இன்று தனது 41-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இயக்குநர் ஆதித்யா தார் மற்றும் நடிகர் ரன்வீர் சிங் கூட்டணியில் உருவான 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' (Dhurandhar: The Revenge)…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பா. ரஞ்சித், தனது தனித்துவமான கதைக்களத்தால் எப்போதும் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர்.