பிரியங்கா சோப்ரா தெலுங்கு பேச பயிற்சி எடுக்கிறார்: ராஜமௌலியின் ‘வாரணாசி’ படத்திற்காக சொந்தக் குரலில் டப்பிங் செய்யத் தயாராகிறார்!
கார்த்திகை 26, 2025 Published by anbuselvid8bbe9c60f

உலக அளவில் பிரபலமான பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தற்போது தெலுங்கு மொழி பேச பயிற்சி எடுத்து வருகிறார். எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கும் பான்-இந்தியா மெகா படமான ‘வாரணாசி’யில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அவர், தெலுங்கில் சரளமாகப் பேசவும், சொந்தக் குரலிலேயே டப்பிங் செய்யவும் தீவிரமாக தயாராகி வருகிறார்.
மகேஷ் பாபு, பிருத்விராஜ் சுகுமாரன் உள்ளிட்டோருடன் இணைந்து நடிக்கும் இப்படம் 2026 ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு முடிந்து 2027-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹிந்தி பின்னணியைச் சேர்ந்த பிரியங்கா, தெலுங்கு மொழியில் பரிட்சயம் இல்லாத நிலையிலும், படக்குழுவினருடன் சிறப்பாகப் பழகவும், தெலுங்கு வசனங்களை உணர்வுபூர்வமாக உச்சரிக்கவும் தீவிர பயிற்சி எடுத்து வருகிறார். “தெலுங்கு பதிப்பிலும் என் சொந்தக் குரலிலேயே டப்பிங் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன்” என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘பாஹுபலி’, ‘ஆர்ஆர்ஆர்’ படங்களுக்குப் பிறகு ராஜமௌலியின் அடுத்த மாபெரும் கனவுத் திட்டமான ‘வாரணாசி’, இந்தியாவின் அனைத்து மொழி ரசிகர்களையும் ஒருசேர கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரியங்காவின் இந்த தெலுங்கு முயற்சி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. #PriyankaLearnsTelugu ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
















