ரஜினி கேங்: ஹாரர் காமெடி படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு

‘MISHRI ENTERPRISES’ சார்பில், ரஜினி கிஷன் தயாரித்து ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் ‘ரஜினி கேங்’. இயக்குநர் M ரமேஷ் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த கலக்கலான ஹாரர் காமெடிப் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். படத்தின் புதுமையான ஃபர்ஸ்ட் லுக் ஏற்கெனவே வரவேற்பைப் பெற்ற நிலையில், விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் தயாரிப்பாளர் திருமலை மற்றும் நடிகர் அஜய் ஆகியோர், ‘ரஜினி கேங்’ என்ற தலைப்பு வெற்றிபெறும் என்றும், ரஜினி கிஷனின் போராட்டத்தையும், இயக்குநர் ரமேஷ் பாரதியின் திறமையையும் வெகுவாகப் பாராட்டினர். மேலும், நல்ல கதை (கண்டன்ட்) உள்ள படங்கள் நிச்சயம் திரையுலகில் வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்தனர். இந்த வெற்றிப் படைப்பிற்குத் தங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து, படக்குழுவினருக்குப் பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டனர்.

நடிகர் ரஜினி கிஷன் பேசுகையில், மக்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே தன் கனவு என்றார். இயக்குநர் ரமேஷ் பாரதி சொன்ன கதைகளில், காமெடி மக்களுக்குப் பிடிக்கும் என்பதால் ‘ரஜினி கேங்’ கதையைத் தேர்வு செய்து தானே தயாரிக்க முன்வந்ததாகத் தெரிவித்தார். நாயகி கிடைக்கத் தாமதமானதையும், நடிகை திவிகாவுக்கு நன்றி தெரிவித்தார். படப்பிடிப்பில் முனீஷ்காந்த் தன் நடிப்பைப் பாராட்டியதையும், கூல் சுரேஷுக்கு ரசிகர்கள் குவிந்ததால் ஷூட்டிங் தாமதமானதையும் நினைவுகூர்ந்தார். இயக்குநர் M. ரமேஷ் பாரதி பேசுகையில், இது காமெடி, ஹாரர், எமோஷன் என அனைத்து அம்சங்களும் நிறைந்த படம் என்றும், நாயகன் கிஷன் தன் பெயரை ரஜினி கிஷன் என மாற்றியதால், அவரது கேங்கைப் பற்றிய கதைக்கு இந்தத் தலைப்பு வைக்கப்பட்டதாகவும் விளக்கினார். படக்குழுவின் கூட்டு உழைப்பால் குறுகிய காலத்தில் நிறைவடைந்த இப்படம் நிச்சயம் ரசிகர்களைக் கவரும் என்று உறுதியளித்தார்.

aathemovie

Recent Posts

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றம்

சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…

7 நாட்கள் ago

MP DEVELOPERS நிறுவனத்தின் பிராண்ட் தூதராக சமந்தா ரூத் பிரபு நியமனம்

சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…

4 வாரங்கள் ago

நிஜ வாழ்விலும் ‘லெஜண்ட்’ தான்! வறுமையில் வாடிய பாவா லட்சுமணனுக்கு ஓடி வந்து உதவிய லெஜண்ட் சரவணன்!

தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…

3 மாதங்கள் ago

ஓடிடியில் ‘தி லெஜண்ட்’ சரவணனின் அதிரடி வேட்டை: பிரைம் வீடியோவில் ‘லீடர்’ படம் புதிய சாதனை!

தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,

3 மாதங்கள் ago

நடிகர் வாகை சந்திரசேகருக்கு மத்திய அரசின் உயரிய “யுவ புரஸ்கார்” தேசிய விருது அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…

3 மாதங்கள் ago

ஒரு பக்கம் மனதை நெகிழ வைத்த இசை… மறுபக்கம் மாடர்ன் மியூசிக் மேஜிக் – சாம் CS அசத்தல்!

இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.

3 மாதங்கள் ago