‘என்னடா பொழப்பு இது’.. கையில் விளக்குமாறுடன் டான்ஸ் ஆடும் ரோஷிணி ஹரிபிரியன்..!
வைகாசி 23, 2025 Published by Natarajan Karuppiah
தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகை ரோஷினி ஹரிபிரியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்குமாறுடன் “என்னடா பொழப்பு இது” என்ற பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
’பாரதி கண்ணம்மா’ என்ற விஜய் டிவி தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை ரோஷினி ஹரிபிரியன். குறிப்பாக இந்த சீரியலில், அவர் பல மாதங்கள் நடந்து கொண்டே இருக்கும் காட்சி ஒன்று ஒரு பக்கம் சோகமாகவும், இன்னொரு பக்கம் கிண்டலுக்கும் உள்ளானது. அதனை தொடர்ந்து, ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடித்த ரோஷினி, குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
கடந்த ஆண்டு வெளியான சூரியின் ’கருடன்’ திரைப்படத்திலும் அவர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரோஷினிக்கு கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர்.
அப்போது தனது பாலோயர்களை திருப்தி செய்ய கிளாமர் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை ரோஷினி பதிவு செய்து வரும் நிலையில், சற்றுமுன் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கையில் விளக்குமாறுடன் டான்ஸ் ஆடுகிறார்; பின்னணியில் “என்னடா பொழப்பு இது” என்ற பாடலும் ஒலிக்கிறது. மேலும், சிறுவயதில் தான் டான்ஸராக ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது என்று குறிப்பிட்டு, தனது சிறிய வயது புகைப்படத்தையும் அந்த வீடியோவுடன் இணைத்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவலாக வைரலாகி உள்ளது.
















