நடிகை சமந்தா பாலைவனத்தில் அமைந்த ஒரு ரிசார்ட்டில் தங்கி இருந்த போது, அங்குள்ள நீச்சல் குளத்தில் டூ பீஸ் பிகினி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா என்பதும், இவர் கடந்த 2023ஆம் ஆண்டுக்குப் பிறகு உடல்நலக் கோளாறு காரணமாக எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில், ‘சுபம்’ என்ற திரைப்படத்தை சமீபத்தில் தயாரித்திருந்தார் என்பதும், இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் 37 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களை வைத்திருக்கும் சமந்தா, அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். இப்போது, அபுதாபியில் உள்ள பாலைவனத்தில் அமைந்துள்ள ஒரு ரிசார்ட்டில் தங்கி இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
அந்த புகைப்படங்களில், டூ பீஸ் பிகினியில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம், புத்தகம் படிப்பது போன்ற ஒரு புகைப்படம் உள்ளிட்ட சில புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
இந்த பதிவு வெறும் அரை மணி நேரத்திற்கு முன்புதான் வெளியிடப்பட்டு இருந்தாலும், இதற்குள் சுமார் மூன்று லட்சம் லைக்கள் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தென் கொரியாவின் தனித்துவமான கதைக் கருவை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், தமிழ் ஒரிஜினல்ஸில் முதன்முறையாக ஒரு கொரிய வெப்டூன்…
Bigg Boss Tamil வீட்டில் படுக்கையறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த காலணிகள் தொடர்பாக ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு, TTF வாசன்…
Bigg Boss Tamil Season 10 நிகழ்ச்சியில், சிறப்பு நாமினேஷன் டாஸ்க்கைத் தொடர்ந்து லட்சுமி பிரியா Bigg Boss வீட்டிலிருந்து…
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், கடந்த வாரம் தனது கருத்துகள் தொடர்பாக எழுந்து வரும்…
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் நடைபெற்ற டாஸ்க் பரபரப்பான கட்டத்தை எட்டுகிறது. டாஸ்க்கின் போது லட்சுமி பிரியா,…
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…