Download App

‘அரசன்’ படப்பிடிப்பு வேகம் பிடிக்கிறது: சிம்பு – வெற்றிமாறன் கூட்டணியில் பரபரப்பு அப்டேட்ஸ்!

தை 22, 2026 Published by anbuselvid8bbe9c60f

arasan

தமிழ் சினிமாவில் தற்போது ‘அரசன்’ என்ற பெயரால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம், நடிகர் சிலம்பரசன் (சிம்பு) நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டி மற்றும் மதுரையில் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், அடுத்தகட்ட ஷெட்யூல் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தில் உள்ளது.

படத்தின் புரோமோ வீடியோ கடந்த அக்டோபரில் அனிருத் பிறந்தநாள் சிறப்பாக வெளியாகி, இளமை தோற்றம் மற்றும் 45 வயது தோற்றத்தில் சிலம்பரசனின் இரட்டை கெட்டப் பாராட்டுகளைப் பெற்றது. இதில் விஜய் சேதுபதி இணைந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சமுத்திரகனி, கிஷோர் உள்ளிட்ட ‘வடசென்னை’ படத்தின் முகங்கள் இடம்பெற்றுள்ளனர். இது வெற்றிமாறனுக்கும் அனிருத்துக்கும் இடையேயான முதல் கூட்டணி என்பது குறிப்பிடத்தக்கது.

arasan1

கதை மதுரையில் தொடங்கி வடசென்னை வரை நீள்கிறது. மதுரையில் ஸ்போர்ட்ஸ் (கபடி) இளைஞனாக இருந்த சிலம்பரசன் சென்னைக்கு வருவதற்கான காரணமும், அதன் பின்னர் நடக்கும் அதிரடி சம்பவங்களும் படத்தின் மையமாக உள்ளன. ஒரு கதாபாத்திரத்தின் பெயர் ‘மதுரை டைகர்’ என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் ஷெட்யூலில் சிலம்பரசனுடன் சமுத்திரகனி, கிஷோர் ஆகியோர் இணைந்தனர். பொங்கலுக்குப் பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தாமதமானது. காரணம், விஜய் சேதுபதியின் பிஸியான அட்டவணை – ‘ஜெயிலர் 2’, ‘ஸ்லம் டாக் 33 டேம்பிள் ரோடு’, பாலாஜி தரணிதரன் இயக்கும் படம் உள்ளிட்டவை. ஆனால், தற்போது அடுத்த மாதம் (பிப்ரவரி) இரண்டாவது வாரத்தில் சென்னையில் ஷூட்டிங் தொடர உள்ளது. இதில் சிலம்பரசனும் விஜய் சேதுபதியும் மோதும் ஆக்ஷன் காட்சிகள் எடுக்கப்படவுள்ளன.

arasan2

ஹீரோயின் ரோலில் சமந்தா நடிக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. படத்தில் இன்னொரு ஹீரோயினும் இடம்பெற உள்ளதாக தகவல்கள் உள்ளன – அதாவது இரண்டு ஹீரோயின்கள். மூன்றாம் ஷெட்யூலில் சிலம்பரசன் வேறொரு தோற்றத்திற்கு மாற உள்ளார்.

படப்பிடிப்பு ஜூன் அல்லது ஜூலை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் ஷெட்யூலிலேயே வெற்றிமாறனின் ‘குட்புக்’கில் சிலம்பரசன் இடம்பிடித்துவிட்டார் என ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

arasan3

இதற்கிடையே, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிலம்பரசன் இணைய உள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சிலம்பரசனின் அடுத்தடுத்த பெரிய திட்டங்களாக கருதப்படுகிறது. வரும் ஏப்ரலில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தின் ஷூட்டிங்கையும் தொடங்கும் திட்டத்தில் சிலம்பரசன் உள்ளார்.

தமிழ் சினிமாவின் ‘அரசன்’ சிலம்பரசனாக மாறி வரும் இந்தப் பயணம் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது!

More News