SK25 ‘பராசக்தி’ டப்பிங் ஸ்டார்ட் – சுதா கொங்கரா மேஜிக் பொங்கலுக்கு ரெடி!

சிவகார்த்திகேயனின் 25-வது படமான ‘பராசக்தி’ படத்தின் டப்பிங் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவிட்டன!

‘மாவீரன்’, ‘அமரன்’, ‘மதராஸி’ எனத் தொடர்ச்சியாக வெற்றிப்படங்களைக் கொடுத்த சிவகார்த்திகேயன், இம்முறை ‘சூரரைப் போற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கராவுடன் இணைந்திருக்கிறார். அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பெரிய ஸ்டார் காஸ்ட்டுடன் உருவாகியிருக்கும் இப்படம், ஜி.வி. பிரகாஷ் குமாரின் 100-வது படமாகவும், டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது.

ஏற்கெனவே வெளியான ‘அடியே அலை’ மற்றும் ‘ரத்தினமாலா’ பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், படக்குழு இன்று சிவகார்த்திகேயன் டப்பிங் ஸ்டுடியோவில் பேச ஆரம்பிப்பதை வீடியோவாக வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் சிவகார்த்திகேயன், “இது என் 25-வது படம்… சுதா மேடத்தோட முதல் கூட்டணி… பொங்கலுக்கு உங்களைச் சந்திக்கத் தயார்!” என உற்சாகமாகப் பேசியிருக்கிறார்.

2026 பொங்கல் (ஜனவரி 14) அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் ‘பராசக்தி’, சிவகார்த்திகேயனின் கேரியரில் மிகப் பெரிய பொங்கல் வெடியாக வெடிக்கக் காத்திருக்கிறது!

anbuselvid8bbe9c60f

Recent Posts

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல்முறையாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றம்

சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…

5 நாட்கள் ago

MP DEVELOPERS நிறுவனத்தின் பிராண்ட் தூதராக சமந்தா ரூத் பிரபு நியமனம்

சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…

4 வாரங்கள் ago

நிஜ வாழ்விலும் ‘லெஜண்ட்’ தான்! வறுமையில் வாடிய பாவா லட்சுமணனுக்கு ஓடி வந்து உதவிய லெஜண்ட் சரவணன்!

தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…

3 மாதங்கள் ago

ஓடிடியில் ‘தி லெஜண்ட்’ சரவணனின் அதிரடி வேட்டை: பிரைம் வீடியோவில் ‘லீடர்’ படம் புதிய சாதனை!

தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,

3 மாதங்கள் ago

நடிகர் வாகை சந்திரசேகருக்கு மத்திய அரசின் உயரிய “யுவ புரஸ்கார்” தேசிய விருது அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…

3 மாதங்கள் ago

ஒரு பக்கம் மனதை நெகிழ வைத்த இசை… மறுபக்கம் மாடர்ன் மியூசிக் மேஜிக் – சாம் CS அசத்தல்!

இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.

3 மாதங்கள் ago