சமூக வலைதள அவதூறு: சைபர் கிரைம் போலீசில் நடிகை லாவண்யா திரிபாதி பரபரப்பு புகார்!
பங்குனி 10, 2026 Published by Natarajan Karuppiah

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான லாவண்யா திரிபாதி, தன்னைப்பற்றியும் தனது குடும்பத்தினர் குறித்தும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய நபர் மீது ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘Purple Crayon00’ என்ற அடையாளத்தைக் கொண்ட ஒரு கணக்கிலிருந்து, நடிகை லாவண்யா திரிபாதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களைக் குறித்து மிகவும் இழிவான மற்றும் தரம் தாழ்ந்த கருத்துக்கள் பதிவிடப்பட்டு வந்துள்ளன.

தொடர்ந்து எல்லை மீறிய இந்தப் பதிவுகளால் மன உளைச்சலுக்கு ஆளான நடிகை, சட்ட ரீதியாக இதனை எதிர்கொள்ள முடிவெடுத்துள்ளார்.
புகாரில் கூறப்பட்டுள்ள தகவல்கள்:திட்டமிட்டே தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அந்த இன்ஸ்டாகிராம் கணக்கு செயல்பட்டு வருகிறது.தனிப்பட்ட முறையில் தன்னை மட்டும் தாக்காமல், தனது குடும்பத்தினரையும் அந்த கணக்கின் உரிமையாளர் இழிவுபடுத்தியுள்ளார்.அவதூறு பரப்பப்பட்ட பதிவுகளின் ஸ்கிரீன்ஷாட்கள் மற்றும் ஆதாரங்களை லாவண்யா திரிபாதி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
நடிகையின் புகாரைப் பெற்றுக்கொண்ட ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசார், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ‘Purple Crayon00’ என்ற கணக்கை இயக்குவது யார்? எந்த இடத்திலிருந்து இந்த பதிவுகள் வெளியிடப்பட்டன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
















