Download App

அஜித்தின் ரேசிங் ஆர்வத்திற்கு அங்கீகாரம்: மஹிந்திரா வழங்கிய உலகின் முதல் ‘Formula E’ தீம் SUV!

பங்குனி 13, 2026 Published by Natarajan Karuppiah

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமாருக்கு, மஹிந்திரா குழுமம் ஒரு சிறப்பான கௌரவத்தை அளித்துள்ளது. அஜித்தின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதான தீராத ஆர்வத்தைப் பாராட்டும் வகையில், 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உலகின் முதல் Formula E themed SUV (Mahindra BE 6 Formula E Edition) காரைப் பரிசாக வழங்கியுள்ளது.

சமீபகாலமாக அஜித்குமார் தனது ‘Ajith Kumar Racing’ குழுவின் மூலம் சர்வதேச கார் பந்தயங்களில் தீவிரமாகப் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் துபாயில் நடைபெற்ற பந்தயங்களில் கலந்துகொண்டு சென்னை திரும்பிய அவருக்கு, இந்த இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

மஹிந்திரா நிறுவனத்தின் வாகனத் தொழில் பிரிவுத் தலைவரான ஆர். வேலுசாமி அவர்கள், அஜித்குமாரைச் நேரில் சந்தித்து இந்த அதிநவீன காரின் சாவியை ஒப்படைத்தார்.

இந்த கார் வெறும் சாதாரண வாகனம் அல்ல; மஹிந்திரா நிறுவனம் கடந்த 12 ஆண்டுகளாக ஃபார்முலா-E (மின்சார கார் பந்தயம்) போட்டிகளில் பங்கேற்று வரும் தனது அனுபவத்தை ஒரு சாலை வாகனமாக மாற்றியுள்ளது.

ஃபார்முலா-E பந்தயக் கார்களில் பயன்படுத்தப்படும் பிரத்யேக கிராபிக்ஸ் மற்றும் வண்ணங்கள் (Tango Red).79 kWh பேட்டரி பேக் கொண்ட இது, ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 683 கி.மீ தூரம் வரை செல்லும் (ARAI சான்றிதழ் படி).ரேசிங் கார்களில் இருப்பது போன்ற ஸ்போர்ட்டியான இருக்கைகள் மற்றும் ‘ஸ்டார்ட்/ஸ்டாப்’ சுவிட்ச்.இது ‘BE 6’ சீரிஸில் ஒரு ஸ்பெஷல் எடிஷன் ஆகும்.

முன்னதாக, ஸ்பெயினில் நடைபெற்ற சோதன ஓட்டத்தில் அஜித்குமார் மஹிந்திராவின் ஃபார்முலா-E காரை ஓட்டியபோது, மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, “வேகம் மற்றும் ஸ்டைலின் சிறந்த கலவை” என அஜித்தைப் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது அஜித்குமார் தனது அடுத்த படமான ‘AK 64’ (ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கம்) பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்குக் கிடைத்துள்ள இந்த கௌரவம் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அஜித்குமாரின் கார் சேகரிப்பில் ஏற்கனவே மெக்லாரன் சென்னா மற்றும் ஃபெராரி போன்ற விலையுயர்ந்த கார்கள் இருந்தாலும், ஒரு இந்திய நிறுவனம் அவரது ரேசிங் ஆர்வத்திற்காக வழங்கிய இந்த மின்சார கார் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

More News

Trending Now