Download App

ரீ-ரிலீஸ் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் ஆக்ஷன் படம்!

தை 27, 2026 Published by anbuselvid8bbe9c60f

str1

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் டிரெண்ட் பலமாக உலா வருகிறது. புதிய படங்கள் வாரந்தோறும் ரிலீஸ் ஆகும் நிலையில், டாப் நடிகர்களின் பழைய ஹிட் படங்கள் மீண்டும் திரையரங்குகளை அலங்கரித்து ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி வருகின்றன.

இதில் சமீபத்தில் அஜித்தின் 50வது படமான மங்காத்தா ரீ-ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இப்போது சிம்பு (சிலம்பரசன் டி.ஆர்.) ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்ட செய்தி ஒன்று வந்துள்ளது.

சிம்புவின் 2008ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் ஆக்ஷன்-மாஸ் படமான சிலம்பாட்டம் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. வரும் பிப்ரவரி 6, 2026 அன்று இப்படம் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

str

சிலம்பாட்டம் படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். பிரபு, ஸ்நேகா, சனா கான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இயக்குநர் எஸ். சரவணன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படம், அதன் ஆக்ஷன் காட்சிகள், ‘வாமா வாமா’ போன்ற பாடல்கள் மற்றும் சிம்புவின் எனர்ஜி நிறைந்த நடிப்பால் ரசிகர்களிடம் இன்றும் கொண்டாடப்படும் படமாக உள்ளது.

தமிழ் சினிமாவில் இந்த ரீ-ரிலீஸ் டிரெண்ட் ரசிகர்களுக்கு பழைய நினைவுகளை புதுப்பிப்பதோடு, தியேட்டர்களுக்கும் புது உற்சாகத்தைத் தருகிறது. சிம்பு ரசிகர்கள் இப்போதே February 6-ஐ எதிர்நோக்கி கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளனர்!