நடிப்பு ஆசான் கே.எஸ். நாராயணசாமி (92) காலமானார்: ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி
கார்த்திகை 18, 2025 Published by Natarajan Karuppiah

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (South Indian Film Chamber of Commerce) நடத்திய திரைப்படப் பயிற்சி நிறுவனத்தில் நடிப்பு ஆசிரியராகப் பணியாற்றிய கே.எஸ். நாராயணசாமி என்கிற கோபாலி (92) இன்று காலமானார்.
1960-களின் இறுதியில் இந்த நிறுவனத்தில் பயின்றவர்களில் ஒருவர்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவருக்கு நடிப்பின் அடிப்படைகளையும், திரை முன்னிலை உத்திகளையும் கற்றுக்கொடுத்த முக்கிய ஆசிரியர்களில் ஒருவராக கோபாலி இருந்தார்.
இன்று ஆசிரியர் கோபாலியின் உடலுக்கு சென்னையில் நேரில் சென்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார். தனது ஆரம்பகால குருவை இழந்து வாடிய ரஜினி, ஆசிரியரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
தமிழ் திரை உலகின் பல முன்னணி நடிகர்களுக்கு நடிப்புப் பயிற்சி அளித்து, பல தலைமுறைகளை வார்த்தெடுத்த கோபாலி அவர்களின் மறைவு திரைத்துறைக்கு பேரிழப்பாகும்.
